நாய் சாப்பிட்ட நிலையில் குழந்தையின் சடலம் கண்டெடுப்பு
(tn) வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொண்டயன்கேணி முருகன் கோவில் வீதியில் இறந்த நிலையில் கைக் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது நேற்றுக் காலை 6.00 மணியளவில் தனது வீட்டுக்கு முன்னால் குழந்தை ஒன்றை நாய் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட பெண்மணி ஒருவர், அயலவர்களின் உதவியுடன் வாழைச்சேனை பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து அவ் விடத்திற்கு விரைந்த வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எம். பி. எம். ஹுஸைன் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு விடுத்த உத்தரவின் பேரில், குழந்தையின் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தலையும் மார்புப் பகுதிகளுமே உள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள குழந்தையின் கால் மற்றும் கைப் பகுதிகள் விலங்குகளால் சேதமாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இக் குழந்தை பிறந்தவுடன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் வாழைச்சேனை பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment