Header Ads



ஜனாதிபதிக்கு மாபெரும் மலர் மாலை அணிவிப்பு..!


(எம்.ஜே.எம். தாஜுதீன்)

மத்திய மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களின் வெற்றியை  உறுதிப்படுத்தும் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குண்டசாலை - திகன கெங்கல்ல விளையாட்டரங்கில் 06-09-2013 பிற்பகல் இடம்பெற்றது.

புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் முன்னாள் மாகாண சபை  உறுப்பினருமான முரளி ரகுநாதன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்டு ஜனாதிபதிக்கு மா பெரும் மலர் மாலை அணிவித்தார்.

பிரதமர் தி.மு. ஜயரத்ன- அமைச்சர்களான பி. தயாரத்ன- நிமல் சிறிபால டி சில்வா- கெஹெலிய ரம்புக்வெல- லக்ஸ்மன் செனவிரத்ன - எஸ்.பி. திஸாநாயக்க- ரோஹி;த்த அபேகுணவர்தன- அப்துல்காதர்- மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.


No comments

Powered by Blogger.