Header Ads



முஸாபர் நகரில் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுரம் தொடருகிறது

இந்தியா - முஸாஃபர்நகர் - உ.பி.யில் தொடர்ந்து கலவரம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் தன் சகோதனை கண் முன்னே வெட்டிக் கொன்ற கொடூரம் குறித்து கதறுகிறார் முஹம்மது பூர் கிராமத்தைச் சார்ந்த பூனம் ஜஹாம்.

உத்திரபிரதேசம் முஸாஃபர்நகர் மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட சிறு மோதல், விஹெச்பி மற்றும் பாஜகவின் சதிச் செயலால் பெரும் கலவரமாய் வெடித்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியுள்ளது.

இந்நிலையில்,  பூனம் ஜஹான் என்ற பெண் கடந்த ஐந்தாம் தேதி  ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் வேளையில் கடந்த 7ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்கு ஜாட் இனத்தைச் சார்ந்த வன்முறையாளர்கள் இவரது வீட்டை தாக்கியுள்ளனர். மேலும், துப்பாக்கியால் சுட்ட கொடூரர்கள் குழந்தைகளை கூட சும்மா விடாதீர்கள் என்று முழக்கமிட்டுள்ளனர்.

மேலும், பூனம் ஜஹாமின் சகோதரர் ரஃபீக்கை  கோடாரியை பயன்படுத்தி அவரது உடலை 3 ஆக துண்டாக்கினர். இந்த கொடுரத்தை ரஃபீக்கின் சகோதரி பூனம் ஜஹாம் நேரில் கண்டு கதறியுள்ளார். எனினும் அவ்விடத்தை விட்டு தப்பி வந்து அவரது கணவரும், குழந்தைகளும் உயிர் தப்பியுள்ளனர். inne

No comments

Powered by Blogger.