பள்ளிவாசலை சுற்றி பன்றி ரத்தம் தெளித்து நாச வேலை
கனடாவில் மசூதியைச் சுற்றி பன்றி ரத்தம் தெளித்து நாச வேலையில் ஈடுபட்டவர்களை
காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
கனடாவின் கியூபெக் பகுதியில் அமைந்துள்ள மசூதி மீது
பன்றி ரத்தம் தெளிக்கப் பட்டுள்ளதோடு மசூதியின் கண்ணாடிகளும் உடைத்து நொறுக்கப்
பட்டுள்ளன,
இதற்கிடையே பன்றி ரத்தம் தெளித்த பகுதியில்
கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் இஸ்லாம் பற்றி தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளதாகக்
கூறப்பட்டுகிறது. எனினும் இச்செயலுக்கு இதுவரை யாரும் பொருப்பேற்கவில்லை.
இதுகுறித்து தெரிவித்த இப்பகுதி காவல்துறை அதிகாரி,
" கண்டெடுக்கப் பட்டுள்ள கடிதத்தில் பன்றி ரத்தம் என கூறப்பட்டுள்ளது எனினும் இது
பன்றி ரத்தம்தானா? என ஆராய ரத்தக்கரையினை சோதனைக்கு அனுப்பியுள்ளோம்" என்று
கூறியுள்ளார். inne
பன்றி இரத்தம் எங்கள்மீது பட்டாலும் பரவாயில்லை பள்ளியில் நீங்கள் கொண்டு வந்து கொட்டினாலும் அதில் எமக்கு ஒருபோதும் கழங்கம் வரப்போவதில்லை. இருப்பினும் இதுபோன்ற சின்னத்தனமான செயல்களை செய்பவர்கள் மன நிலையை பார்க்கும்போது கண்ணில் பட்டால் அவர்கள் நிலைமை கவலைக்கிடமாக மாறிவிடும்.
ReplyDelete