Header Ads



ஈரானின் இனிப்பான பேச்சு பற்றிய உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவருவேன் - நெதன்யாகு

(TN) ஈரான் அணு செயற்பாடு குறித்து அந்நாட்டு புதிய ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானியின் இராஜதந்திர முயற்சிகளுக்கு சவால் விடுக்கும் நோக்கில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு நேற்று நியூயோர்க்கை நோக்கி பயணமானார்.

ஈரானின் இனிப்பான பேச்சு மற்றும் கவர்ச்சிகரமான தாக்குதல் பற்றிய உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர உத்தேசித்திருக்கிறேன்’ என்று நேற்று காலை டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா நோக்கி புறப்படும் முன் நெதன்யாகு அந்நாட்டு வானொலிக்கு குறிப்பிட்டார். ‘இந்த நேரத்தில் உண்மையை கூறுவது உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு அதேபோன்று இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு முக்கியமானதாகும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

ஈரான் ஜனாதிபதி ஐ. நா. பொதுச் சபையில் கடந்த வாரம் ஆற்றிய உரையில் அந்நாட்டு அணுத்திட்டம் குறித்து காலம் வரையறுக்கப்பட்ட பெறுபேறை பெறும் பேச்சுக்கு தயாராகி வருவதாக அறிவித்தார். ஆனால் இந்த உரை நம்பிக்கை அற்றது என்றும் கபட நாடகம் என்றும் இஸ்ரேல் பிரதமர் விபரித்தார்.

இந்நிலையில் அமெரிக்கா பயணமாகி இருக்கும் நெதன்யாகு இன்று திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்திக்கவுள்ளதோடு தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை நியூயோர்க் திரும்பி ஐ. நா. பொதுச் சபையில் உரையாற்ற திட்டமிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.