Header Ads



இலங்கையில் செலவுகள் அதிகமாகும்

உலகிலேயே ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது சுற்றுலாப் பயணிகளுக்கான செலவு  அதிகரித்த நாடாக இலங்கை காணப்படுகின்றது என மதிப்பீட்டு அறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.   

சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடமாக முன்னிலையில் இருந்த இலங்கை அந்த இடத்தில் இருந்து கீழ் மட்டத்திற்கு சென்றுள்ளதுடன் இந்தோனேசியாவின் பாலி தீவு முன்னிலைக்கு வந்துள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. 

அத்துடன் தென்னாபிரிக்கா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ள நிலையில் இலங்கை 5 ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது. அதன்படி ஏனைய நாடுகளின் விடுமுறை விடுதிகளுக்கான செலவுகள் குறைவாக இருக்கின்ற போதும், இலங்கையில் அதற்கான செலவு 45 வீதம் அதிகமாகும். 

அத்துடன் விடுமுறை விடுதிகளுக்கான கட்டணம் குறைவாக உள்ள இடங்களில் இந்தோனேசியாவின் பாலி தீவு முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தென்னாபிரிக்கா உள்ளது. மேலும் இலங்கையின் தலைநகர் கொழும்பில் சூரிய கிரீம், கிருமிநாசனி மற்றும் மூன்று வேளை உணவு மற்றும் வைன் போன்றவற்றுக்காக மாத்திரம் 54.45 பவுண்கள் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கப் கோபி சராசரி விலை 26 பென்ஸ், பாலி தீவுடன் ஒப்பிடும் போது இலங்கையில் செலவுகள் 24 வீதம் அதிகமாகும் என்றும் குறித்த மதிப்பீட்டு அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது. 

1 comment:

  1. பின்ன இருக்காதா என்ன, அதல்லாம் மகிந்தவின் சிந்தனைகள். சாதாரண குடிமக்கள் படும் கஷ்டத்தைப்பற்றி எவருமே கண்டுகொள்வதில்லை, பணக்கார சுற்றுலாக்காரர்களுக்கே இந்த தாக்குபிடிக்க முடியாத நிலை என்றால், வருமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் கதி என்னாகுவது?

    ReplyDelete

Powered by Blogger.