சிங்கள மக்கள் இனவாதத்தை எதிர்க்கின்றனர் - அசாத் சாலி
மாகாண சபைத் தேர்தலில் இனவாத கட்சிகளை சிங்கள மக்கள் நிராகரித்துள்ளதாகவும் அரசாங்கத்தின் வாக்கு வங்கி சரிவடைந்துள்ளதாகவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நடைபெற்று முடிந்த மாகாணசபை தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் அனைவரையும் மக்கள் தோற்கடித்துள்ளனர். அது போல் இனவாதம் பேசுவோரால் நிறுத்தப்பட்டவர்களும் தோல்வி அடைந்துள்ளனர். இதன் மூலம் சிங்கள மக்கள் இனவாதத்தை எதிர்க்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது. நானும் நவசமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவும் கண்டியில் சந்தித்த பீடாதிபதிகள் இருவரும் இனவாத்தை எதிர்ப்பதாகத் தெரிவித்தனர்.
Post a Comment