Header Ads



தமிழ் தேசிய கூட்டமைப்பு தனிநாடு கோரவில்லை - சம்பந்தன்

தமது அரசியல் விஞ்ஞாபனம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலார் சந்திப்பு ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று 15-09-2013 யாழ்ப்பாணத்தில் நடத்தியது.

இதில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பு தனிநாடு கோரவில்லை என்று தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தரப்பினர், தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை முறையாக படிக்குமாறு இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். sfm

1 comment:

  1. இது சின்னப்பிள்ளைக்கும் தெரிந்த விடயம்.

    தங்கத் தட்டில் வைத்து தமிழீழத்தைக் கொடுத்தாலும் சம்பந்தன் ஐயா மாத்திரமல்ல நாங்களும் அதை ஏற்றுக் கொள்ளவே மாட்டோம்.

    ஐக்கிய இலங்கைக்குள் எமது தாய்மொழிக்குரிய அந்தஸ்துடன் கூடிய சுயாட்சி முறையான சமஷ்டி ஆட்சியையே இன்று தமிழ்பேசும் அனைனைத்து மக்களும் விரும்புகின்றனர். எதிர்பார்க்கின்றனர்.

    என்றாலும் இதுவெல்லாம் எமது நாட்டின் தலைவருக்கும் அவரது சகபாடிகளுக்கும், ஒத்தூதும் பேரினவாதிகளுக்கும் இன்னமும் புரியவில்லை.

    அதுதான் "ஆசியாவின் ஆச்சரியம்"

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.