Header Ads



இறைவன் மீது ஆணையாக சிசி + மொஹமட் இப்ராஹிம் பலிவாங்கப்படுவர்

(tn) எகிப்து உள்துறை அமைச்சரை இலக்கு வைத்து தலைநகர் கெய்ரோவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு சினாய் பகுதியை மையமாகக் கொண்டு செயற்படும் ஆயுதக் குழுவான அன்சார் பைத் அல் மக்திஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அத்துடன் இஸ்லாமியவாதிகளை ஒடுக்கும் செயலுக்கு பலிவாங்கும் நடவடிக்கை தொடரும் என அந்த அமைப்பு உறுதி அளித்துள்ளது.

“உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு முறையை தகர்த்தெறிய இறைவன் எமக்கு அனுமதி அளித்துள்ளான். ஒரு தற்கொலை தாக்குதல் நடவடிக்கை மூலம் எகிப்து சிங்கங்களில் ஒன்று உள்துறை கொலைகாரனுக்கு மரண பயத்தை கண்ணால் பார்க்கவைத்தது. எதிர்காலத்தில் வரப்போவது இதைவிடவும் மோசமாக இருக்கும்” என்று அந்த ஆயுதக் குழு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எகிப்து உள்துறை அமைச்சர் மொஹமட் இப்ராஹிமை இலக்குவைத்து கடந்த வியாழக்கிழமை தற்கொலை கார் குண்டுத் தாக்குதல்தாரி குண்டை வெடிக்கச் செய்தார். இதில் 20 பேர் காயமடைந்தனர். எனினும் உள்துறை அமைச்சருக்க எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சி ஆதரவு இஸ்லாமியவாதிகள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு பலிவாங்கப்படும் என்றும் ஆயுதக் குழு எச்சரித்துள்ளது. முஸ்லிம்களைக் கொன்றது அவர்களது கெளரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திய சிசி மற்றும் மொஹமட் இப்ராஹி மிடமிருந்து பலிவாங்கப்படும் என்பதை இறைவனிடம் ஆணையிட்டுக் கூறுகிறோம். எனவே இராணுவ மற்றும் உள்துறை அமைச்சின் தளங்களில் இருந்து விலகி இருக்கும்படி அனைத்து எகிப்து முஸ்லிம்களிடமும் கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.