கல்முனையில் இருந்து பொத்துவில் வரை
தினமும் கல்முனையில் இருந்து பொத்துவில் இற்கு வேலைக்காக செல்வோர் 100 இற்கும் அதிகமானோர். இதற்காக அரச சேவை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தினமும் காலை 6.15 இற்கு கல்முனையில் இருந்து புறப்படும் பொத்துவில் பஸ் ஆனது சாய்ந்தமருது , மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், ஒலுவில் பாலமுனை, அட்டாளச்சேனை வழியாகச்சென்று அக்கரைப்பற்றினை அடையும். அதே போல் அந்த பஸ் வண்டியானது அக்கரைப்பற்றில் இருந்து காலை 7.15 இற்கு புறப்பட்டு தம்பட்டை, தம்பிலுவில், திருக்கோவில், காஞ்சிரங்குடா, சங்கமன்கண்டி, கோமாரி, ஊரணி வழியாகச்சென்று பொத்துவில்லினை அடையும். இந்த பஸ் வண்டியில் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் தங்களது வேலை தளங்களை நோக்கி பயணிக்கின்றனர்.
இந்த பஸ்வண்டியை அடுத்து இரண்டாவதாக புறப்படும் பஸ்ஸானது அக்கரைப்பற்றில் இருந்தே காலை 8.15 இற்கு பொத்துவில் நோக்கி புறப்படுகின்றது
இந்த பஸ்வண்டியானது காலை 9.30 இற்கே பொத்துவில்லினை சென்றடையும். இந்த காலை 8.15 மணிக்கு புறப்படும் பஸ்வண்டியில் இரண்டு பஸ் வண்டியில் ஏறக்கூடிய அளவு பயணிகள் ஏறி அடைந்து விடவார்கள். இதில் வருந்தத்தக்க விடயம் என்னவென்றால் இந்த பஸ் வண்டி எண்ணற்ற பயணிகளை ஏற்றிச் செல்வதனால் போகின்ற வழியில் ஏதாவது ஒரு இடத்தில் பஸ் பழுதடைந்து நின்று விடும். இவ்வாறு 5வது நாளாகவும் (25/09/2013) தம்பட்டையில் பழுதடைந்து நின்றைவிட்டது. ஒரு தடவை இரு தடவை சகிக்கலாம் அலுலகங்களில் மன்னிப்பு வழங்குவார்கள் மூன்று தடவைகளுக்கு மேலாக இதே இடையூறு ஏற்பட்டுள்ளதால் சாராதியை குறை கூறுவதா நடத்துணரை குறைகூறுவதா இல்லை இ.போ.சபையினை குறை கூறுவதா என்று தெரியாமல் நடத்தணருடன் மக்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுகின்றனர் காரணம் தங்கள் அலுவலகங்களுக்கு நேரத்திற்கு செல்ல முடியாத ஆதங்கத்தினால்.
எனவே இதனால் வேலைக்கு செல்லும் மக்கள் பாரிய அசெளகரியங்களை எதிர் நோக்குகின்றனர். இந்நிலைப்பாட்டினை மாற்றியமைக்க வேண்டும். இதற்காக காலை 7.15 முதல் 9 மணிக்கிடையில் ஒவ்வொரு அரை மணி நேர இடைவெளிக்குள் அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவில்லிற்கு பஸ்ஸினை சேவையில் ஈடுபடுத்த வேண்டும். தற்போது ஒரு மணிநேர இடைவெளிக்குள்தான் பஸ் சேவையில் உள்ளது. அதுமட்டுமின்றி சேவையில் ஈடுபடுத்துகின்ற பஸ்ஸானது தூரப் பிராயணம் செய்ய உகந்த பஸ் வண்டியாகவும் சேவையில் ஈடுபடுத்த வேண்டும். போகும் வழியில் பழுதடையக்கூடிய பஸ்ஸினை சேவைக்கு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
அதே போன்று மாலை 4 மணியில் இருந்தும் ஒவ்வொரு அரை மணி நேர இடைவெளியிலும் பொத்துவில்லில் இருந்து அக்கரைபரபற்றிற்கு பஸ் சேவையினை வழங்க வேண்டும்.
எனவே இக்கோரிக்கையினை பொதுமக்களாகிய நாங்கள் ஒன்று சேர்ந்து இ.போ.சபையிடம் முன் வைக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு தீர்வு கிடைக்கும். சாரதியினையோ நடத்தரினையோ பகைப்பதில் எந்த பயனும் இல்லை அவர்களும் அதன் ஊழியர்களே!
அரசியல் மட்டங்களில் உள்ளவர்களே இவ் அசெளக்கரியத்தற்கு தீர்வைப் பெற்றுத்தர உதவுங்கள்.
Post a Comment