சரியான சேவையைச் செய்திருப்பின் சண்டியர்களை அழைத்து வரத் தேவையில்லை
நவநீதம்பிள்ளை எமது தாய்க்கு சமமான ஒரு மனித உரிமை செயற்பாட்டாளராக இருந்தபோதும் அவருக்கு திருமணம் முடித்து வைக்கும் தரகர் வேலையைச் செய்யும் அரசு பற்றி சர்வதேசம் என்ன நினைக்கும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் கண்டி மாவட்ட ஐ.தே.க. வேட்பாளருமான ஆசாத் சாலி தெரிவித்தார்.
கண்டியிலுள்ள அவரது காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்த தனது அயராத கல்வி முயற்சியால் ஒரு நீதிபதியாகி பின்னர் அவர் மனித உரிமைகள் ஆணையாளராக ஒயர் பதவிக்கு வந்தவர். இவரை நாம் எமது தாயின் நிரையில் வைத்து அவரை ஆதரித்து அவர் வந்துள்ள நோக்கத்தை முடித்து விட்டுச் செல்ல எமது வழமையான சம்பிரதாயங்களை செய்திருக்கலாம்.
இதை விட்டு வயது முதிர்ந்த அவருக்கு திருமண முன் மொழிவு ஒன்றை அரசு செய்கிறது அல்லது அரசின் பங்காளியான ஒரு அமைச்சர் செய்வதென்றால் சர்வதேச சமூகம் எமது நாட்டைப் பற்றி என்ன சினைத்திருக்கும். இதனால் பிரச்சினை தீருமா? ஆல்லது இன்னும் வளருமா? எனக் கேட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இற்கு வாக்களிப்போர் இரசின் வெற்றிலைச் சின்னத்திற்கு நேரடியாக வாக்களிப்பது நல்லது. இரண்டும் உன்றுதான் என்றார். 18 வது திருத்தற்திற்கு வாக்களித்து விட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தற்போது கண்டியில் வைத்து வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த வருத்தம் காரணமாக நிறைவேற்றப்பட்ட சட்ட மூலத்தை மாற்ற முடியுமா?
கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீல. மு. கா.அங்கத்தவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவை அனைத்தும் நாடகம் என்றார்.
மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இலங்கை 137 வது .டத்தில் எள்ளது. அதே நேரம் மியன்மார், வங்கதளதேசம், உகண்டா,நேபாளம் போன்ற நாடுகள் எமக்குமேல் உள்ளன. ஆப்படியாயின் எமது நிலை என்ன? இந்த அரசு சரியான சேவையைச் செய்திருப்பின் சண்டியர்களை கண்டிக்கு அழைத்து வரத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
Post a Comment