Header Ads



புத்தளம் வாக்கு சீட்டு விவகாரம் - விசாரணைகளை மேற்கொள்ள குழு நியமனம்

(Sfm) புத்தளம் புனித என்ரூ வித்தியாலய வாக்கெண்ணும் மத்திய நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட வாக்கு சீட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழு ஒன்ற நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 5 பேரடங்கிய குழுவொன்று தேர்தல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளின் போது, அதற்கான சாட்சிகளிடமிருந்து முதற்கட்ட தகவல்கள் பெற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையில் எந்தவொரு அதிகாரியாவது தொடர்பு கொண்டிருப்பார்களாயின் அவ்வாறானவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.