மாகாண சபைகளுக்குமான தேர்தலில் தெரிவான முஸ்லிம் பிரதிநிதிகள் விபரம்
(ஏ.எல்.ஜுனைதீன்)
நடைபெற்று முடிந்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் மொத்தமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ( போனஸ் ஆசனம் உட்பட ) 148 மாகாண சபை பிரதிநிதிகளில் 92 பேர் சிங்களவர்கள் 46 பேர் தமிழர்கள் 10 பேர் முஸ்லிம்கள் எனத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் பெயர் விவரம் வருமாறு,
அசாத் சாலி ஐக்கிய தேசியக் கட்சி வாக்குகள் 55395
லாபிர் ஹாஜியார்ர் ஐக்கிய தேசியக் கட்சி வாக்குகள் 45792
ரிஸ்வி ஜவஹர்ஷா முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகள் 11530
ரிப்கான் பதியுதீன் ஐ. ம.சுதந்திர முன்னணி வாக்குகள் 11130
முகம்மட் நியாஸ் முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகள் 3767
உவைஸ் ஹாஜியார் முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகள் 3273
கபிர் முகம்மட் ரைஸ் முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகள் 3165
அஹமட்லெப்பை ஜனூபர் ஐ.ம.சுதந்திர முன்னணி வாக்குகள் 1726
என்.பி.எம்.தாஹீர் ஐ.ம.சுதந்திர முன்னணி போனஸ் ஆசனம்
ஐயூப் அஸ்மின் இலங்கை தமிழரசுக் கட்சி போனஸ் ஆசனம் (எதிர்பார்க்கப்படுகின்றது)
What these people are going to do now being in opposition parties.
ReplyDeleteதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போனஸ் ஆசனங்களில் ஒன்று, மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அஸ்மின் அய்யூப் என்பவருக்கு வழங்கப்படும் என்பதை மன்னார் மாவட்ட த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
ReplyDeleteஅடுத்த போனஸ் ஆசனம், த.தே. கூட்டமைப்பின் 5 வேட்பாளர்களுக்கு தலா ஒரு வருடம் வீதம் சுழற்சி முறையில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் 4 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதால், தாமே இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் குரல் என தம்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றது.
அக்கட்சியின் 4 உறுப்பினர்களில் ஒருவர் மாத்திரமே 11,130 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஏனைய மூவரும் 4000 வாக்குகளைக்கூடப் பெறவில்லை. இந்த இலட்சணத்தில் மு.கா. எப்படி இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த குரலாக கொக்கரிக்க முடியும்?
த.தே.கூட்டமைப்பிலுள்ள கட்சித் தலைவர்களுக்கிடையில் பலதரப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவர்கள் தேர்தல் என்று வருகின்றபோது தமது சமூகத்தின் வாக்குகளை ஒரே புள்ளியில் பெற்றுக்கொள்ள ஒன்றுபட்டு விடுகின்றனர்.
ஆனால் நமது முஸ்லிம் சமூகத்திலோ அந்த ஒற்றுமை கட்சிகளின் தலைவர்களிடத்திலும் இல்லை. ஒரே கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களிடமும் இல்லை.
அதனால்தான் 55,395 மற்றும் 45,792 வாக்குகளைப் பெற்ற கண்டி மாவட்ட ஐ.தே.கட்சி முஸ்லிம் வேட்பாளர்களின் வரிiசையில் 3வது உறுப்பினர் தெரிவாகவில்லை.
ஒரு வாக்காளர் தமது 3 வாக்குகளையும் ஐ.தே.கட்சியில் போட்டியிட்ட மூவருக்கு ஒற்றுமைப்பட்டு வாக்களித்திருப்பின் இந்தத் துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்காது. என்ன செய்யலாம்..?
எத்தனை தேர்தல்கள் நடைபெற்று எத்தனை முறை இப்படி படிப்பினைகள் பெற்றாலும் நம் சமூகத்தின் தலைவிதியை எவராலும் மாற்றவே முடியாது!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-