Header Ads



கல்விக்கு வறுமை தடையல்ல – உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.எல்.எம். லாபீர்

(மன்சூர்)

மாணவர்களின் கல்விக்கு வறுமை ஒரு தடையல்ல. குடும்பத்தில் காணப்படும் சில பிரச்சினைகளை பெற்றோர்கள் வறுமையாக நினைத்து அது கல்விக்குத் தடையாக இருப்பதாக நினைக்கின்றனர். இதன்காரணமாக மாணவர்களின் கல்வியை பாதிக்கச் செய்வதில் சில பெற்றோர்களே முன்னிலை வகிக்கின்றனர். ஏன அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் முறைசாரக் கல்விக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். லாபீர் உலக எழுத்தறிவு தினத்தை ஒட்டி பொத்துவில் கோட்டத்திலுள்ள அல் இஷ்ரக் மகாவித்தியாலயத்தில் வலயத்தின் சார்பாக நடைபெற்ற பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு அதிபர் எம்.எல்.எம். றபீக் தலைமையில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துரை வழங்குகையில்

இன்று பாடசாலைகள் கற்பதற்கு ஏற்றஇடமாக ஒழுங்குபடுத்தப்பட்டு, அழகுணர்வுடன் காணப்படுகின்றன. காலை ஆகாரம், சீருடைத்துணி, புத்தகம், இலவசக் கல்வியுடன் சேர்த்து அரசாங்கம் அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தாலும் சில மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுக்குள்ள வறுமையான நிலையை மேம்படுத்தி தங்களுடைய பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவைப்பதில் வறுமையைக் காரணமாகக் காண்பிக்கின்றனர். இன்று வறுமை என்று கூறுகின்றோம். யாராவது ஒருநேர உணவை உண்ணாமல் இருக்கின்றனரா? கட்டாயக் கல்வி வயது அமுலில் இருக்கின்றது. மாணவர்களது உரிமைகள் விடயத்தில் அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது கற்றலை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கான சகல வசதிகளும் பாடசாலைக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது. இவற்றைக் கருத்திக் கொண்டு தங்களுடைய பிள்ளைகளை ஒவ்வொருநாளும் பாடசாலைக்கு ஒழுங்கான முறையில் அனுப்பி இலவசக் கல்வியை திறமையாக பெற்று இந்நாட்டின் சிறந்த நற்பிரஜையாக உருவாக்குதல் அவசியமாகும். அந்தப் பிள்;ளையின் மூலம் நீங்கள் நினைத்த பலனை அடைவதற்கு அவனது கல்வியறிவு அத்திவாரமாக அமைதல்வேண்டும்.

மேலும், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் எழுத்தறிவு விடயத்தில் அதிகமான மாணவர்கள் தங்களது திறமையைக் காண்பித்து வருகின்றனர். இருந்தாலும் சில பிரதேசங்களில் ஒருசில மாணவர்கள் இடைவிலகியும், விட்டுவிட்டும் பாடசாலைக்கு வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை பாடசாலைகளுடன் இணைக்கும் செற்றிட்டத்தை கல்வியமைச்சு, மாகாணக் கல்வியமைச்சு, யுனிசெப் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றிவருகின்றோம். கற்பதற்கான உரிமை மாணவர்களுக்கு மறுக்கப்படுகின்றபோது அது பிரச்சினைகளை உருவாக்கிவிடும். எனவேதான் இன்றைய உலக எழுத்தறிவு தினத்தில் தங்களுடைய பிள்ளையின் அறிவுக்கு விருந்தாக அமைகின்ற பாடசாலைக் கல்வியை திறம்பட வழங்குவதற்கு ஆசிரியர்கள் தயாராக இருகின்றனர். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி அவர்களை அறிவுடையோராக மாற்றம் காணச் செய்வதற்கு உதவவேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.



No comments

Powered by Blogger.