Header Ads



வெட்கம் கெட்ட சவுதி அரேபியாவை, இஸ்லாமிய நாடென்று எவ்வாறு சொல்லலாம்..?

(பைரூஸ்)

‘இன்றைய ஊடகங்கள் தருகின்ற மிகச் சிக்கலான ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட குறிப்பிட்ட சில சக்திகளுக்கும் குறிப்பிட்ட சில நாடுகளுக்கும் அந்த ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற அதிகார பீடங்களுக்கும் சார்பான செய்திகளைத் திரித்து மாற்றி கூட்டிக் குறைத்துப் பொய்யாக எங்களிடத்தில் செய்திகள் வந்தடைகின்ற காலகட்டத்திலே இன்றைய சர்வதேச அரசியலை, நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான சிக்கலான ஒன்றாகும்’

வெலிகம ஹொட் நிவ்ஸ் குறுஞ் செய்திச் சேவை ஏற்பாடு செய்திருந்த ரமழான் வினாக்களுக்கான சரியான விடை எழுதியோருக்கு பரிசில்கள் வழங்கும் வைபவம் இன்று 07-o9-2013 வெலிகம பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றிய சர்வதேச பார்வை ஆசிரியர் ரவூப் ஸெய்ன் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் அங்கு உரை நிகழ்த்தும் போது,

இன்று இஸ்லாமிய உலகை அழிப்பதற்காக அமெரிக்கா பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டி வருகின்றது. ஒன்றன் பின் ஒன்றாய் முஸ்லிம் நாடுகளை அழித்தொழிப்பதிலேயே குறியாய் நிற்கின்றது. அதன் சதிவலையில் மர மண்டைகளான இன்றைய இஸ்லாமிய முலாம் பூசிக் கொண்டுள்ள நாடுகள் சிக்கித் தவிக்கின்றன. தலையாட்டு பொம்மைகளாக அந்நாடுகள் உள்ளன.

ஸவுதி அரேபியா உங்களது பார்வையில் இஸ்லாமிய நாடாக இருக்கின்றது. ரிஸானா நபீக்கிற்கு ஷரீஆச் சட்டம் என்ற பெயரில் கொலை செய்தது. அங்கே எங்கே ஷரீஆச் சட்டம் இருக்கின்றது. இஸ்லாம் – அல்குர்ஆன் ஸுன்னா சொன்ன இஸ்லாமிய ஆட்சி அங்கு இருக்கின்றதா? இல்லவே இல்லை. இஸ்லாமிய நாடுகள் என்று தம்மை அழைத்துக் கொள்கின்ற இந்நாடுகள் இஸ்ரவேலினதும் அமெரிக்க வல்லரசினதும் முகவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் தங்களது மன்னராட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பல்லாயிரம் கோடி பில்லியனே பில்லியன் டொலர்களை அவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கிறார்கள்.

அந்நாட்டுப் பல்கலைக் கழகங்களிலுள்ள பாடத்திட்டங்களினூடாக இஸ்லாத்தில் ஆட்சியில்லை, அதிகாரம் இல்லை அப்படியொன்றும் இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள்.

அரபு நாடுகளை அழித்து எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதே அமெரிக்கனின் மூலநோக்கு. அதற்காகத்தான் அவன் அராபியனுடன் ஸவுதியுடன் கைகோத்துக் கொண்டுள்ளான். வெட்கம் கெட்ட ஸவுதி இஸ்லாமிய நாடென்று எவ்வாறு சொல்லலாம். என்றும் குறிப்பிட்டார்.

வெற்றி பெற்றோருக்கான பரிசில்களை விழாவில் கலந்துகொண்ட அதிதிகள் வழங்கி வைத்தனர். பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளரும், ஊடகவியலாளருமான எம். மிப்ராஹ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

15 comments:

  1. eli koluthu poonaya ponnukku koopiddathaam

    Aamaanathu aasapaduthaam peetha solahu maathalluthaam

    ReplyDelete
  2. Mr. Raoof zein,
    You know what is islam before criticize ksa.
    First you become a good muslim.
    Folliw the sunnah.
    Keep beard.
    Learn islam from good islamic scholar.
    Learn akeedah of islam.
    Learn which is deviant groops in islam.
    Learn who is shia, who is khawarij, who is kaadiyani.....
    Dont close the eyes & speek.
    Before criticize ksa, learn the plan of shia.
    What is their akeeda.
    Then you will come to know why saudi always against siriya & iran.
    I ask allah to give you good knowledge.
    Yaseer (Abu Ammar)

    ReplyDelete
  3. via Islamiya Thagawal Nilayam-iic

    இஸ்லாமிய கோஷமிட்டு இஸ்லாமிய வேஷமிட்டு ஆட்சிபீடம் ஏறியவுடன் தமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக இஸ்லாம் தடை செய்துள்ளவற்றை பகிரங்கமாக அரங்கேற்றியவர்களே இக்ஹ்வாங்களும் அந்த சிந்தனையை ஆதரிப்பவர்களும். இவை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப் படும் போது சகித்துக் கொள்ள முடியாத இக்ஹ்வானிய தக்லீத்வாதிகள் "ஏன் சவூதியை விமர்சிப்பதில்லை" இப்போது எகிப்தில் ஆட்சி புரிபவர்கள் நாலவர்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்புகின்றனர்.

    உண்மையில் சவூதியை சரி காண்பவர்களிடம் தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும். எம்மை பொருத்தவரையில் சவூதியோ ஏனைய அரபு நாடுகளோ யூதர்களையும் நசாராக்களையும் உற்ற நண்பர்களாக்கி தங்களுக்கு எதிராகவே ஒரு தெளிவான ஆதாரத்தை ஆக்கிக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் பாதையில் உலெகெங்கும் போராடும் முஜாஹிதீன்களுக்கு எதிராக யூத நசாராக்களை உற்ற நண்பர்களாக்கி செயல் படுபவர்களே அவர்கள். எனவே நாம் எந்த அரபு நாட்டு ஆட்சியாளரையும் நாம் இஸ்லாமிய வாதிகள் என்று பார்ப்பதில்லை.

    “முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தர விரும்புகிறீர்களா?” (4: 144)

    இப்போது எகிப்தில் ஆட்சி புரிபவர்கள் மகா கேட்டவர்கள் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை. அவர்கள் பிழையானவர்கள் என்றால் இக்ஹ்வான்கள் சரியானவர்கள் தானே என்று அர்த்தமாகி விடாது. அவர்கள் இஸ்லாத்தை நேராடியாக அளிக்க முற்படுகின்றனர். இக்ஹ்வான்கள் இஸ்லாத்துக்குல் இருந்தே, இஸ்லாமிய சிந்தனை என்ற பெயரிலே இஸ்லாத்தை மாசுபடுத்துகின்றனர்.

    ReplyDelete
  4. இயக்க வெறி நன்றாக தெரிகின்றது
    பாவம் இவர் சவ்தி அரேபியாவின் பல்கலைகலக பாடத்திட்டங்களை எல்லாம் கரச்சி குடுச்சி ஆராச்சி பண்ணிட்டார்

    ReplyDelete
  5. My Dear Brother,

    I see some correct points in your statement. But not all what you stated are acceptable.

    Can you give a country following Islam in accordance with the Quran and Sunnah in your view ?

    Every one of us know, the situation of not only the Muslim Countries but the day to day life of our own... How far we practice Islam, while we talk of others a lot.

    I can smell from your talk, that You belong to any organization, which strongly opposes KSA for in every act.

    I agree no country in this period stick to Quran and Sunnah 100%... But compare to other countries... you may find this is practiced in KSA. But also as human being.. they also have people who violate Islam. especially those in power. But it should not make your mouth to use illiterate worlds in your statements. There are good people and Scholars who stick to Quran and Sunnah in way it was followed by Sahaab (ral)..

    May Allah Guide you and me to talk both pages of any book.

    ReplyDelete
  6. vaai irukkirathu enpathatkaaha ninathathai ellaam pesuvathu arivullawarhalin naahareehamalla.

    ReplyDelete
  7. jaffnamuslim இற்கு பணிவான வேண்டுகோள்
    தயவு செய்து பொதுவான சிந்தனை உடையவர்களின் ஆக்கங்களை பதிவில் இடவும்.
    தான் அறியா மொழி தன் பிடரிக்கு சேதம் என்பதுபோல் இங்கு சர்வதேச இஸ்லாத்தை பற்றி எழுதியவர் சற்று ஆலமாஹ study பண்ணி எழுதி இருந்தால்
    ஏற்றுக்கொள்ளலாம் .
    இவரின் அறிவை எதனோடு ஒப்பிடுவதென்று புரியாமல் இருக்கு .
    தடி எடுத்தவன் எல்லாம் சண்டியன் ஆஹ முடியாது

    நன்றி.

    ReplyDelete
  8. MR. Rauf your association is good? do you have islamic mind? DA? all are selfisht................ dont sale islam. i know your background. from kinniya

    ReplyDelete
  9. குறைந்த பட்ச இஸ்லாமிய சட்டங்கள் இன்று சவுதியில் மட்டுமே அமுலில் உள்ளது, ஷியாக்கள் இலங்கையிலும் தாக்கம் செலுத்துகிறது என்பதற்கு இந்த கட்டுரையும் எடுத்து காட்டு...

    ReplyDelete
  10. சவுதி அரபியாவை முஸ்லிம் நாடு என்று எவ்வாறு சொல்லலாம்?
    1. அவர்கள் தரீக்காகளை வணங்க விடுவதில்லை
    2. சியாக்களுடன் (Iran, Iraq, ……) உறவு வைத்துக்கொள்வதில்லை
    3. சுபஹ் தொழுகையில் குனுத் ஓதுவதில்லை
    4. இரவுநேரத் தொழுகை 8 ரக்காயத்துக்கள் மாத்திரம் தொழுகிரார்கள்
    5. சியா கொள்கையில் உள்ளவர்களுக்கு நிதி உதவி தருவதில்லை
    6. மற்ற ஊர் பொயர் தொரியாத பொறியார்கள் சென்ன கதைகளை யெல்லாம் இபாதத்தாக ஏற்பதில்லை
    7. மதுகபுகளை பின்பற்றுவதில்லை
    8. கொலை,போதைபொருள் கடத்தியவர்களை தண்டிக்கிறார்கள்
    இவ்வாறு இருக்கும் போது சவுதி அரபியாவை முஸ்லிம் நாடு என்று எவ்வாறு சொல்லலாம் ?

    ReplyDelete
  11. சவுதி அரேபியா முஸ்லிம் நாடுதான் இஸ்லாமிய நாடல்ல.
    அங்கு மத்கபுகள் இல்லை. இணைவைப்பு இல்லை. இன்னும் எத்தனையோ..
    அங்கு உலமாக்களுக்கு எங்கும் இல்லாத சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக பேசலாம். எழுதலாம். விமர்சிசலாம். சவுதி கலீபா அதனைப் பார்த்து பிழை செய்திருந்தால் திருத்திக் கொள்வார்.
    அங்கு ஆட்சி மாறறம் நபிவழியில் வழங்கப்படுகின்றது. அங்கு குடும்ப ஆட்சி நடப்பதேயில்லை. கலீபா பாதுகாப்புக்கு அமெரிக்காவையும் இஸ்ரேலையும் நம்பாமல் அல்லாஹ்வை மாத்திரமே நன்பியுள்ளார். அவர்ட பணத்துல ஆயிரக்கணக்கான தாயிகள் உலகெல்லாம் பிரச்சராம் செய்கிறார்கள்.

    ReplyDelete
  12. சவுதி அரேபியா முஸ்லிம் நாடுதான் இஸ்லாமிய நாடல்ல.
    அங்கு மத்கபுகள் இல்லை. இணைவைப்பு இல்லை. இன்னும் எத்தனையோ..
    அங்கு உலமாக்களுக்கு எங்கும் இல்லாத சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக பேசலாம். எழுதலாம். விமர்சிசலாம். சவுதி கலீபா அதனைப் பார்த்து பிழை செய்திருந்தால் திருத்திக் கொள்வார்.
    அங்கு ஆட்சி மாறறம் நபிவழியில் வழங்கப்படுகின்றது. அங்கு குடும்ப ஆட்சி நடப்பதேயில்லை. கலீபா பாதுகாப்புக்கு அமெரிக்காவையும் இஸ்ரேலையும் நம்பாமல் அல்லாஹ்வை மாத்திரமே நன்பியுள்ளார். அவர்ட பணத்துல ஆயிரக்கணக்கான தாயிகள் உலகெல்லாம் பிரச்சராம் செய்கிறார்கள்.

    ReplyDelete
  13. தயவு செய்து சவுதிக்கு ஏச வேண்டாம். அவர்களின் எச்சிலில் வாழ்க்கை நடத்தும் எத்தனையோ தாயிகள் சவுதிக்காக உயிரையும் கொடுப்பார்கள்.

    ReplyDelete
  14. Nanbaa,VETKAM,MAANAM,ROASHAM ENBAZELLAAM VITTUVITTA ORU ULAGIL VAALNTHU KONDIRUKKIROAM ENBAZAI VETKATHTHAI VITTU VITTU CHOLLA VEYNDI IRUKKIRAZU.NEENGAL CHOLLUM INDHA CHEYZIYAI VARUDAA VARUDAM LATCHAK KANAKKAIK KOTTIMAKKAAWAI NOAKKI OADUFAWARGALIN KAAZUGALIL VILUMPADI URATHTHUCH CHONNEERGAL ENRAAL NANRAAGA IRUKKUM.AENENRAAL ELLAAP POAKKIRITH THANANGALAIYUM PANNIVITTU "ANRU PIRANTHA PAALAGANAAGA" MAARUWAZATKU NAMMAWARGAL SHAARAI SHAARAIYAAY MAKKAAWAI NOAKKI "MIKKA PAYA BAKTHI"UDAN OADIK KONDIRUKKIRAARGAL.ILANKAYIL INRU AZIGAMAANA ULAMAAKKAL "TRAVEL SUB AGENDUGALAAKATHAAN"MIMBARGALIL
    AERI UMRAAWUKKUM HAJJIKKUM VILAMBARAM KODUTHTHU "BAKTHIWAANGALAI"
    THERIVU CHEYZU VALI NADATHTHUKIRAARGAL.SAUDIYUM AENAYA ULAGAMUM
    ENGALIN KOAMALITH THANATHTHAIP PAARTHTHU CHIRIPPAAY CHIRIKKIRAZU.
    EZILUM ORU ALAVU VAENDAAMAA?

    ReplyDelete
  15. இங்கே இஸ்லாமிய அடையாளம் இல்லாத மறமன்டை என்ற தனது அறியாமைத்தனத்தால் சவ்தியை விமர்சனம் செய்யும் சண்டித்தனம் உங்களின் இஸ்லாமிய அடிப்படையில் உள்ள அறிவீனத்தை எடுத்துக்காட்டுகிறது இந்தக்கருத்தின் அரம்பகர்த்தாவோ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் வலியுறுத்தி சொன்ன சுன்னா தாடியை வைக்கமுடியாமல் யூதர்களின் வலிமுறையை பின் பற்றி க்கொண்டு அவரின் இஸ்லாமிய சாயத்தை இங்கே காட்டி இருக்கிறார் அவர் கோமாலித்தனமான கருத்தை அமோதிக்க சிலர் வரிந்துகட்டுவதைப்பார்த்தால் மனவேதனை அடைகிறது இந்த அலவுக்கு எமது சமூகம் அறியாமையில் இருப்பதைக்கண்டு சகோதரர்களே இஸ்லாமிய அடிப்படைகளை முதலில் சிறந்த உலமாக்களிடத்தில் சென்று கற்றுக்கொண்டு பேசுங்கள் ஸுன்னாக்களை எடுத்து நடவுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.