Header Ads



அரசாங்கம் முஸ்லிம்களுக்கு செய்கின்ற அநீதி உலகளாவிய ரீதியில் பேசப்படுகிறது - ஹலீம் எம்.பி.

(மொஹொமட் ஆஸிக்)

முஸ்லிம்களுக்கு அரசு இழைக்கின்ற அநீதியை கண்டித்து அனைத்து முஸ்லிம்களும் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

இன்று (2013 09 13) மாலை அக்குறணை அரபா வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாறறும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் இவ்வாரும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் மக்கள் மேல் சுமத்திவுள்ள வாழ்க்கை செலவு உற்பட பல பாரிய கற்களினால் மக்கள் அரசை வெருத்து ஐக்கிய தேசிய கட்சியுடன் இனைந்த வன்னம் உள்ளனர்.

இம் முறை நடைபெரும் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெருவது நிச்சயம். ஆனாலும் எமது வெற்றியை மேலும் வலுவான வெற்றியாக ஆக்குவதற்கு அனைவரும் வாக்களிப்பது முக்கியமாகும். 

தற்போதைய அரசாங்கம் முஸ்லிம்களுக்கு செய்து வருகின்ற அநீதி இன்று உலகலாவிய ரீதியில் பேசப்படுகின்றன. முஸ்லிம் சமுதாயத்திற்கு அரசு அல்லது அரச அனுசரணையுடன் இளைக்கப்படும் அநீதிகளைக் கண்டிப்பதற்கு அனைத்து முஸ்லிமகளும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாகக்ளிக்க வேண்டும் என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.

மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐதேக வில்  போட்டியிடும் எம்.எஸ்.எம்.ஷாபி, எம்.ஆர்.மலிக், ஹிதாயத் சத்தார். ஜெய்நுலாப்தீன் லாபீர் ஆகியோர் உற்பட பலர் இங்கு உரையாற்றினர்.

1 comment:

  1. ஐ.தே.க மேடையில் ஆஸாத் சாலிக்கு இடமில்லையா...?

    கண்டி மாவட்டத்தில் 10ம் இலக்க வேட்பாளராகப் போட்டியிடும் ஆஸாத் சாலி அவர்களே அமோகப் பெரும்பான்மை விருப்பு வாக்குளால் ஐ.தே.கட்சிப் பட்டியலில் முன்னிலைக்கு வருவார் என்பதே இன்றளவு வரையான கருத்துக் கணிப்பாக உள்ளது.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.