இஸ்லாமிய, கலை, கலாசார விழா சம்பந்தமான ஆலோசனைக் கூட்டங்கள்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் மாகாண தமிழ் இலக்கிய விழாவினை முன்னிட்டு பிரதேச மட்டங்களில் நடாத்தப்படவுள்ள தமிழ்,சிங்கள,இஸ்லாமிய, கலை, கலாசார விழா சம்பந்தமானஆலோசனைக் கூட்டங்கள் அம்பாறை,மட்டக்களப்பபு,திருகோணமலை ஆகிய முன்று மாவட்டங்களிலும் நடாத்தப்பட்டு வருகின்றன.
இதன் கீழ் அம்பாரை மாவட்டத்தில் தமிழ் கலை,கலாசார விழா திருக்கோயிலிலும், இஸ்லாமிய கலை,கலாசார விழா அக்கரைப்பற்றிலும், சிங்கள விழா தமணயிலும் நடைபெறவுள்ளன.
அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ள இஸ்லாமிய கலை, கலாசார விழா சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் ஏற்பாடு செய்த இந் நிகழ்வு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.டபிள்யு.யு.வெலிக்கல தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.அஹமட் கியாஸ், திருகோணமலைமாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஐ.ஆர்.சி.நிமல் சிரிபால பண்டார, மாகாண அலுவலக கலாசார உத்தியோகத்தர் கே.அன்பழகன், அம்பாரை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், இலக்கியத்துறை ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின்போது அம்பாரை மாவட்டத்திற்கான இஸ்லாமிய கலை,கலாசார விழாவினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பத்தாம் திகதி நடாத்துவதெனவும் இஸ்லாமிய கலை,கலாசார ங்களைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகள் உட்பட தமிழ், சிங்கள சமுகங்களின் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகள் கலைஞர்கள் கௌரவிப்பு உள்ளிட்ட சிறந்த நிகழ்சிசிகளை அரங்கேற்றுவதெனவும் தீர்மானிக்;கப்பட்டது.
அம்பாரை மாவட்டத்திலுள்ள சிங்களப் பிரதேசங்களை ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் தமன பிரதேச செயலகப் பிரிவிலும், தமிழ் பிரதேசங்களை ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் திருக்கோவிலிலும்,முஸ்லிம் பிரதேசங்களைஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வு அக்கரைப்பற்றிலும் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற் கொண்டு வருவதாக மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் தெரிவித்தார்.
Post a Comment