பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கினால் அரசுடன் தொடர்ந்து இணைந்திருப்போம்
முஸ்லிம் சமூகத்துக்கு பிராந்திய ரீதியில் வெவ்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. மாகாண சபைத்தேர்தல் முடிவுற்றதன் பின்பு பிராந்திய ரீதியிலான பிரச்சினைக்கு அரசு எமது கட்சியூடாக தீர்வுகள் வழங்கினால் அரசுடன் தொடர்ந்து இணைந்திருப்போம். இல்லையேல் யோசித்து கட்சியின் அரசியல் உயர் பீடத்தின் அனுமதியுடன் இறுதித் தீர்மானத்தை எடுப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
ஹசன் அலி தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கையில்,
‘சமூக நலன் கருதி அரசிடமிருந்து பல வாக்குறுதிகளைப் பெற்றுக்கொண்டே அரசுடன் இணைந்தோம். என்றாலும் அரசாங்கத்தினால் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கட்சிக்கு வளப்பங்கீடுகள்இ தொழில் வாய்ப்புக்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை, பகிர்ந்தளிக்கப்படவில்லை. இதனால் கட்சியின் உறுப்பினர்களில் பலர் அதிருப்தியடைந்துள்ளனர்.
மாகாண சபைத் தேர்தலின் பின்பு அரசுடன் நாம் எமது பக்க நியாயங்களையும் எமக்கு வழங்கப்படாத பங்கீடுகளையும் முன் வைத்து பேச்சுவார்த்தைகள் நடத்துவோம். அதன் பின்பே இறுதி தீர்வு அரசியல் உயர் பீடம் மூலம் மேற்கொள்ளப்படும் என்றார். Vi
You will think of withdrawing your support to the government until parliament is dissolved. We know the meaning of your statement, after the election you will support the government stating that the government agreed to fulfill all your demands.
ReplyDeleteNobody knows your demand and how they fulfilled them. This drama is running last many years. You all are not different from other politicians, they are better than you as they are not selling the name of the Islam.
Continue it, good luck.
அதென்னய்யா நீங்கள் காலம் முழுக்க பேச்சுவார்த்தைகள் நடாத்தினோம்.. உடன்பாடு கண்டோம்... ஒப்பந்தங்கள் செய்தோம் என்று றீல் விடுவது?
ReplyDeleteஇதுவரைக்கும் ஒரு உடன்படிக்கையையாவது ஊடகங்கள் மூலம் மக்களின் பார்வைக்கு விட்டுள்ளீரா?
எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனோடும் உமது கட்சி பேச்சுவார்த்தை நடாத்தி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. ஐ.தே.கட்சியுடனும் உமது கட்சி பேச்சுவார்ததை நடாத்தி உடன்படிக்கை செய்தது. இந்த அரசாங்கத்தோடும் பேச்சுவார்த்தை நடாத்தி உடன்பாடு காணப்பட்டு அரசாங்கத்தில் சேர்ந்தீர்.
எங்கே ஐயா உமது பேச்சுவார்ததைகளுக்கும், எட்டப்பட்ட தீர்வுகளுக்குமான ஆதாரங்கள்???
இதையெல்லாம் 'தாருஸ்ஸலாம்' மலகூடத்தில் வைத்துக் கொண்டா, தேர்தல் காலத்தில் மக்களிடம் வாக்குக் கொள்ளையிட்டு வியாபாரம் செய்ய இப்போது ஒப்பாரி வைக்கிறீர்?
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், ஐ.தே. கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அப்பேச்சுவார்த்தை முறிவடைந்த போதிலும் நடைபெற்ற விடயங்களை அவர்களின் 'புதிய நாளை' பத்திரிகை மூலம் மக்களுக்குத் தெரிவித்திருந்தார்கள்.
அதேபோல் அண்மையில் த.தே. கூட்டமைப்புடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடாத்தி எட்டப்பட்ட உடன்பாடுகiளின் அடிப்படையில் எழுதப்பட்ட உடன்படிக்கையை எல்லா ஊடகங்களிலும் வெளிப்படுத்தி இருந்தார்கள்.
இந்த வெளிப்படைத்தன்மை, நீர் செயலாளராக இருக்கும் கட்சியில் ஏன் பேணப்படுவதில்லை?
அதென்ன தேர்தல் முடிந்த பின்னர் அரசுடன் சேர்ந்திருப்பதா? விலகுவதா? என்ற யோசனை?
நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் நீங்கள் பொறுக்கிச் சேர்க்கவுள்ள முஸ்லிம்களின் வாக்குக்கு மஹிந்த அரசாங்கம் நல்ல விலை கொடுத்தால் சேர்ந்திருப்போம். அல்லது விலகி விடுவோம் என வெளிப்படையாக அறிக்கை விட வேண்டியதுதானே.. அதுதானே உங்களது தொழில்!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
தேர்தலுக்கு முன் எமது சமூகத்திற்கு எதிரான வன்முரைகளை கன்டுகொள்ளாத இந்த அரசு தேர்தலுக்குப் பின்னர் தீர்க்கும் என்பதில் என்ன நம்பிக்கை......... !!!!
ReplyDeleteயார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் SLMC யும் அதன் தலைமைத்துவமும் அரசுடன் ஒட்டிச்செல்வதை தடுக்கமுடியாது. இந்த விடயம் ஹசன் அலி அவர்களுக்கும் நன்கு தெரிந்திருந்தும் இப்படியொரு அறிக்கை விடுவது ஒரு முட்டாள்தனமாக தெரியவில்லையா?
இந்த செயதியில் ஹசன் அலி அவர்கள் குறிப்பிடும் 'வழங்கப்படாத பங்கீடு' என்று கருத்தை சற்று விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்.
Well said, Mr. Jamaldeen.
ReplyDeleteThis man repeating above statement for many years. Cheater, Liar. Please don't trust these people statements.
We need a geniune leadership and insitituation to lead Muslimcommunity to have peaceful life with dignity not current garbage of SLMC. I write in this forum sevral time this carbage to be dumbed out of the the seen. The eastern sundry politicians sould think for the community not for thier personal rival politics.
ReplyDelete