Header Ads



கிழக்கு மாகாணத்தில் சிவப்பு அரிசி சாப்பிடாமையே, மந்தமைடைய காரணம்

(யு.எம்.இஸ்ஹாக்)

வடக்கிலும், தெற்கிலும் சிவப்பு அரிசி சாப்பிடுகிறார்கள்  கிழக்கில்  நாம் சிவப்பை  முதலில் நீக்கி விடுகிறோம்  அதனால் நாம் மந்தமடைகின்றோம் அவர்கள் கல்வியில் முன்னேறுகின்றார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிவப்பு அரிசு சோறு சாப்பிட பழக்குங்கள்  அதில் போஷணை  இருக்கிறது என  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் அல் -யு.எல்.எம்.ஹாசீம் தெரிவித்தார் 

கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட நற்பிட்டிமுனை லாபீர் வித்யாலயத்தில் அபிவிருத்தி விழா 26.09.2013 நடை பெற்றது  இதில் கௌரவ அதிதியாக கலந்து உரையாற்றும் போதே அவர் மேற் கண்ட விடயத்தை கூறினார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

பாடசாலைகளில் கற்பித்தல் விடயத்தில் ஆசிரியர்கள் பொடுபோக்குடன் செயல்படுகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி அடைவு மட்டம் பின்னோக்கி செல்கிறது குறிப்பாக இது கிழக்கு மாகாணத்தில் அதிகம் காணப்படுகிறது.

பெற்றோர்கள் பாடசாலைகளுக்கு மனதால் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் . தரமான கல்வி உங்கள் பிள்ளைகளுக்கு வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். கிழக்கு மாகாணத்தை பொறுத்த மட்டில் அரசியலால் பாடசாலைகளுக்கு  உதவி செய்யப்படுகின்றன.  ஆனால் கல்வி அடைவு மட்டம் எந்த நிலையில் உள்ளது என்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என வலயக்கல்விப்பணிப்பாளர் ஹாசீம் தெரிவித்தார்.

2 comments:

  1. No No Sir, All are terrible busy , some teachers are coming and signed going their own work, some teachers are telling evening class we will learn, some are under tree, some are in political, some are chatting with other teacher etc… so where they have time to teach …..
    Government Must change the school under private then these useless teacher will learn well

    ReplyDelete
  2. Dear Zonal Director,
    To improve your education ones effort is the key, it doesn't matter red rice or white bread, but majority of eastern people especially muslims are thirsty for money whatever the way and never mind education

    ReplyDelete

Powered by Blogger.