Header Ads



சவூதியில் தயாரான திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிசீலனை (வீடியோ)

ஹைஃபா அல் மன்சூர் என்னும் சவூதி பெண் இயக்குநர் இயக்கியுள்ள வஜ்தா (Wadjda) என்னும் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு, பிறமொழிப் படங்களின் வரிசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா என்கிற மரபார்ந்த நாடு, ஆஸ்கர் விருதுப் பரிசீலனைக்கு தன் திரைப்படத்தை அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.

வாத் முஹம்மது என்னும்  சிறுமி இப்படத்தின் நாயகியாக நடித்துள்ளார். பத்துவயதுச் சிறுமியொருவர் குர்ஆன் மனனப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெறுவதன் மூலம் தனக்கு விருப்பமான மிதிவண்டியை வாங்குவதாகக் கதை பின்னப்பட்டுள்ளது.

"எங்கள் நாட்டையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு படம் எங்கள் எல்லைகளுக்கப்பால் உள்ளவர்களாலும் வரவேற்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது" என்று சவூதி கலை மற்றும் கலாச்சார கழகத்தின் தலைவர் சுல்தான் அல் பாஸி கூறியுள்ளார்.

முழுக்க முழுக்க சவூதியிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், கடந்த துபாய் படவிழாவில் சிறந்த அராபியப் படமாகவும், அதில் நடித்திருந்த சிறுமி வாத் சிறந்த நடிகையாகவும் தேர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இயக்குநர்  39 வயதான ஹைஃபா, இருகுழந்தைகளின்  தாயார், இப்படத்தை முழுக்கவும் ரியாத்திலேயே படமாக்கியுள்ளார் என்பது குறிக்கத்தக்கது.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=2pcCCbLzhcY#t=24



No comments

Powered by Blogger.