Header Ads



மனித உரிமைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களை அறிவூட்டும் கருத்தரங்கு


(மொஹொமட் ஆஸிக்)

மனித உரிமைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களை அறிவூட்டும் மூன்று நாள் வதிவிடக் கருத்தரங்கொன்று கண்டி ரிவடேல் ஹோட்டலில் 2013 09 08 முடிவடைந்தது.

இலங்கை ஊடக தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் இக் கருத்தரங்கு இடம் பெற்றது. இலங்கை ஊடக தொழிற் சங்கத்தின் செயலாளர் தர்மசிரி லங்காபேலி, மற்றும் ராவய பத்திரிகையின் செய்தி ஆசிரயர் லசந்த ருஹுனகே உற்பட பலர் இங்கு விரிவுரைகளை நடாத்தினர்.

இலங்கையில் மட்டுமல்லாமல் உலகில் பல நாடுகளிலும் மனித உரிமைகள் பாரிய அளவில் மீரப்படுவதாகவும் அது மிகச் சிரிய மட்டத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது என்றும் தர்மசிரி லஙகாபேலி இங்கு தெரிவித்தார். கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை,மொணராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய ஏழு மாவட்டஙகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் இக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.