ரணில் விக்ரமசிங்க பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த மாகாணசபைத் தேர்தலில் கட்சி அடைந்த தோல்வியைக் கருத்திற் கொண்டு ரணில் விக்ரமசிங்க தலைமைப் பதவியை துறக்க வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல்களில் அடையும் வெற்றி தோல்விகளுக்கு ஒட்டு மொத்த கட்சியே பொறுப்பு சொல்ல வேண்டும் எனவும் தனிப்பட்ட நபர்களின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வது குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கட்சி வெற்றியீட்டினால் அனைவரின் உழைப்பு காரணமாகவே வெற்றியீட்டியதாக குறிப்பிடும் தரப்பினர், தோல்வியடைந்த உடன் கட்சித் தலைவர் மீது குற்றம் சுமத்துகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். gtn
பதவியை யார்தான் விடுவார்கள் இந்தக் காலத்தில்..? இதற்கு ரணில் மட்டும் விதிவலக்கா??
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-