அரசியல்வாதிகளின் ஆயுதங்களை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை
(ஏ.எல்.ஜுனைதீன்)
அரசியல்வாதிகளின் ஆயுதங்களை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸாரிடம் மனித உரிமைகள் குறித்த புத்திஜீவிகள் அமைப்பு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், குறித்த மாகாண அரசியல்வாதிகள் ஆயுதங்களைப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவேதான், அரசியல்வாதிகளின் ஆயுதங்களைப் பொலிஸார் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை உள்ளடக்கிய விசேட கடிதம் ஒன்று பொலிஸ் மாஅதிபர் என். கே. இலங்கக்கோனுக்கு இவ் அமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி உதித்த குணசேகர மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அரசியல்வாதிகளின் உறவினர்கள் அதிக எண்ணிக்கையில் இத் தேர்தலில் போட்டியிடுவதனால், தேர்தல் தினம் நெருங்க, நெருங்க வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையும் உயர்வடைந்து செல்கின்றது. தேர்தல் வன்முறைகளின் போது ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் இவ் விசேட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment