முஸ்லிம் காங்கிரஸினை ஆதரித்து மன்னாரில் பிரச்சாரம்
(யு.கே.காலித்தீன்)
வட மாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை ஆதரித்து பல முஸ்லிம் கிராமங்களில் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் பலர் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கட்சியின் மூத்த துணைத் தலைவர் முழக்கம் அப்துல் மஜீத், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.பரக்கத்துல்லா, ஏ.ஏ.பஷீர், ஏ.எல்.எம். முஸ்தபா மற்றும் எம்.எஸ். உமரலி ஆகியோரே அப்பகுதிகளில் முகாமிட்டு கட்சியின் வெற்றிக்காக பணியாற்றுகின்றனர்.
இதன்போது முசலி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பொற்கேணி, முசலி, பண்டாரவெளி, மறிச்சகட்டி, கரடிக்குழி, பாலைக்குழி, வேப்பங்குளம், மாந்தை பிரதேச எல்லைக்குட்பட்ட பெரிய மடு, விடத்தல், ஆண்டான்குளம், பள்ளிவாசல் பட்டி, அடம்பன் போன்ற முஸ்லிம் கிராமங்களில் பள்ளிவாசல்களில் அவற்றின் நிருவாகிகள் மற்றும் பிரமுகர்கள், பொது மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
வட மாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் மஹிந்த பண்டாரவை ஆதரித்து சாந்திபுரத்தில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றிலும் இவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள மாந்தை மேற்க்கு பிரதேச செயலக எல்லைக்குள் இருக்கும் அடம்பன் கிராமத்துக்கு சென்றபோது குறித்த கிராமத்தில் யுத்த காலத்தில் பாதிப்புக்குள்ளான அடம்பன் முஹைதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கும் இவர்கள் விஜயம் செய்துள்ளனர். இவர்களுடன் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாருக் அவர்களும் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
எங்கப்பா மக்களையே காணவில்லை. போனவர்களே அவர்களுக்குள் கூட்டம் நடத்துகிறார்கள் போல் தெரிகிறது.
ReplyDeleteகட்சியின் வெற்றிக்காக பாடுபடுகிறோம் என்று தலைவருக்கு காட்டி அவரை காக்கா பிடிக்க முயற்சி செய்கிறார்கள் போல் தெரிகிறது. சுயநலக் கும்பல்கள்.