நிந்தவூரில் மையவாடிகள் ஒளியூட்டப்படுமா...?
(சுலைமான் றாபி)
நிந்தவூரில் காணப்படும் மையவாடிகள் தற்போது புனருத்தாபனம் செய்யப்பட்டு வந்தாலும் அதீத குறைகள் நிறைந்த இடமாகவே அவதானிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசியல் பிரமுகர்களின் நெருங்கிய நண்பர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் மரணமாகும் போது மட்டும் இந்த மையவாடிகள் அபிவிருத்தியடைய வேண்டும் என பலராலும் நன்குணரப்படுகிறது. அனால் இறுதியில் இவைகள் மழுங்கடிக்கப்பட்ட வார்த்தைகளாக மறக்கடிக்கப்படுகிறது. உண்மையில் இந்த விடயத்தில் பிரதேச சபையும், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
30,000 ற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நிந்தவூரில் 04 மையவாடிகள் காணப்படுகிறன. அதில் வௌவாலோடை மையவாடியானது அழகு நிறைந்ததாகவும், ஒரு முறையான திட்டம் மூலமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஏனைய மையவாடிகள் ஒப்பீட்டளவில் கவனிப்பாரற்ற நிலையில் கால்நடைகள் உலாவித்திரியும் இடமாக உருவெடுத்துள்ளது. உண்மையில் இந்த நிலை மாற்றமடைய வேண்டும். மேலும் இதற்கான அடிப்படைத்தேவைகளான பொருட்களும் குன்றிய நிலையும் காணப்படுகின்றது. உண்மையில் மையவாடிகளானது ஒரு பொது இடம் என்ற அடிப்படையில் அந்த இடத்திற்கான பொருட்களை பிரதேச செயலகமோ, பிரதேச சபையோ அல்லது ஊரினை நிர்வகிக்கும் ஜும்மா பள்ளிவாசலோ வழங்குவது அவர்களின் மீதுண்டான பொறுப்பாகும். இவைகளை நடைமுறைப்படுத்த முடியாமல் இந்த விடயத்தில் அவர்கள் பராமுகமாக இருப்பது நன்கு புலப்படுகிறது.
மேலும் இங்கு காணப்படும் மையவாடிகளில் போதிய நீர் வசதி இல்லாமலும், ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய மண்வெட்டி போன்ற சாதனங்கள் இல்லாமலும், ஜனாசாக்களை நல்லடக்கம் செய்த பிற்பாடு பயான் நிகழ்த்துவதாக இருந்தாலும் அதற்குரிய நிலையான ஒலிபெருக்கி சாதனங்கள் இல்லாத குறையும் நிலவுகின்றது. உண்மையில் இவைகள் ஒப்பீட்டளவில் பார்க்கும் பொது அவசியம் தேவைப்படும் சாதனங்களாக அவதானிக்கப்படுகிறது. இது தவிர மிகப்பெரும் குறையாக நிலையான மின்கம்ப மின்சார வசதிகள் இல்லாத குறையாக காணப்படுகிறது. இதனால் இரவு வேளைகளில் வபாத்தாகும் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யும் போது போதிய வெளிச்சமின்றி மக்கள் சிரமப்பட்டு திரி விளக்கையயோ அல்லது வேறு ஒளி தரும் பொருட்களையோ கொண்டு தங்கள் சொந்தங்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய வேண்டிய நிலையும் தற்போது நிலவுகின்றது. இந்த குறைகளை நிபர்த்தி செய்ய அந்தந்த மையவாடிகளுக்கு பொறுப்பாகச் செயற்படும் பள்ளிவாசல்கள் கவனம் செலுத்த தவரியுள்ளனவா என்ற வினா தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளதனை நன்றாக அவதானிக்க முடிந்தது.
இதேவேளை மிக அண்மையில் ஒரு அரசியல் பிரமுகரின் தாயார் மரணமான போது அந்த ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் மையவாடியின் சுற்று மதில் குறையினை கண்டறிந்து அதனை உடனடியாக தீர்த்து வைத்திருந்தார். தற்போது அந்த குறை நிபர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. எனவே இப்படியான குறைகளை வெளியூர் அரசியல் வாதிகள் மட்டுமே இனம்கண்டு அதனை செய்ய நிபர்த்தி செய்ய வேண்டுமா..? இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு மாகாண சபை உறுப்பினர், பிரதேச சபை தவிசாளர் மற்றும் எதிர்கட்சித்தலைவர் போன்ற அரசியல் பலம் படைத்தவர்கள் நிந்தவூரில் காணப்பட்டும் இந்த மையவாடிகள் விடயத்தில் அவர்கள் பராமுகமாக நடந்து கொள்கின்றனரா என்ற கேள்வியும் மக்களிடம் எழுந்துள்ளது.
எனவே நிந்தவூரில் காணப்படும் 04 மையவாடிகளுக்கும் நிலையான மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதில் பிரகாசமாக மின்விளக்குகள் பொருத்தப்படல் வேண்டும். மேலும் இந்த மையவாடிகளில் ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யும் போது ஒரு முறையான ஒழுங்கு வரிசைகள் அந்தந்த பள்ளிவாசல் நிர்வாக சபையினரால் பேணப்படுதல் வேண்டும். இது தவிர ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்கான பொருட்களும் அந்தந்த பள்ளிவாசல் நிர்வாக சபையினரால் பேணப்படுதல் வேண்டும். எனவே இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கூடுதல் கரிசனை எடுத்து காணப்படும் குறைகளை அரசியல் பேதங்களை கழிந்து நிறைவேற்றி மய்யவாடிகளை ஒளியுள்ளதாக மற்றிக்கொடுப்பது சம்பந்தப் பட்டவர்களின் கடமையல்லவா? எனவே இவைகளை அமுல்படுத்த முன்வரவேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

Post a Comment