கோத்தபய ராஜபக்ஸவுக்கு இஸ்லாம் + முஸ்லிம்கள் பற்றி மந்தபுத்தி - அஸாத் சாலி
யுத்தம் முடிவடைந்து சமாதானம் மலர்ந்துள்ள இவ்வேளையில் மீண்டும் மீண்டும் யுத்தத்தின் கொடூரங்களை நினைவுறுத்தும் வகையில் பாதுகாப்பு மாநாடுகள் வருடாந்தம் நடத்தப்படுவதும் அரச ஊடகங்களின் செய்தி அறிக்கைகளில் யுத்தம் சம்பந்தமான காட்சிகளை அதிகாலை வேளையிலேயே காட்டி மக்களுக்கு வெறுப்பூட்டுவதும் வேண்டத்தகாத செயல்களாகும். மலர்ந்துள்ள சமாதானத்தின் பலன்கள் மக்களைச் சென்றடைவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டுமே தவிர யுத்தத்தால் ஏற்பட்ட வடுக்களைக் காட்டிக்காட்டி மக்களுக்கு அச்சமூட்டுவது கண்டிக்கத் தக்கதாகும் என்று கூறினார் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி.
அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற அமைப்பின் சார்பாக கொழும்பில் இன்று (04.09.2013) நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு கூறினார்.இங்கு அவர் தொடர்ந்து பேசும்போது:
கொழும்பில் இடம்பெறுகின்ற பாதுகாப்பு செயலமர்வில் பேசும் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ இஸ்லாமிய தீவிரவாதம் இன்று உலகை ஆட்டிப்படைப்பதாகவும், இந்தப் பிராந்தியத்திலும் அது தீவிரமாகப் பரவி வருவதாகவும் இலங்கையில் உள்ள சில பிரிவினரும் அதனால் ஈர்க்கப்பட்டுள்ளமை பற்றி பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதை நான் மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் உலக நடப்பு விவகாரங்கள் பற்றியும் அவருக்குள்ள மந்தபுத்தியையே இது பிரதிபலிக்கின்றது. இலங்கையில் உள்ள முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையிலும் அவமதிக்கும் வகையிலும் இந்தக் கூற்று அமைந்துள்ளது. இதனை இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் அமைப்புக்களும் பிரதிநிதிகளும் கண்டிக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கின்றேன்.
அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கும் முஸ்லிம் காங்கிரஸின் திருகுதாளத்தை முஸ்லிம் சமூகம் இன்று நன்கு உணர்ந்துள்ளது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் எந்தவொரு உண்மையான முஸ்லிமும் இந்தக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டான். மூன்று மாகாணங்களிலும் ஒன்றிலேனும் அவர்கள் ஒரு ஆசனத்தையும் வெல்லப் போவதில்லை. அது நிச்சயம். முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் அரசியல் குத்துக்கரணம் இன்று மக்களுக்கு அத்துப்படியாகிவிட்டது. அதேபோல்தான் அந்தக் கட்சியின் கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களும், ஆளுக்கு ஒரு திசையில் சென்று தமது சட்டைப் பைகளை இயன்ற வரையில் நிரப்பிக் கொள்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றனர். இந்தக் கோஷ்டிக்கு தலைமை தாங்குபவர் ஜெமீல் என்பவர். இதை நான் எந்த இடத்திலும் அச்சமின்றி கூறுவேன். அவர்தான் இன்று இலங்கையின் முதல்தர கில்லாடி திருடன். போலி பல்கலைக்கழக சான்றிதழ்கள் தயாரித்து அவர் இதுவரை பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். இன்னும் பல சட்டவிரோத செயல்களிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார்.முக்கிய அமைச்சர் ஒருவரை கைக்குள் போட்டுக் கொண்டு அவர் இந்த மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றார். முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கும் இதில் ஒரு பங்கு போவதாக நினைக்கின்றேன். இதனால் தான் ஜெமீலின் நடவடிக்கைகளை கட்சியும் கண்டும் காணாமல் இருக்கின்றது. ஜெமீலின் நடவடிக்கைகள் பற்றி முறையான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் எனவும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
கண்டியில் அரச சொத்துக்கள் இன்று மிகப் பரவலாகவும் பகிரங்கமாகவும் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன.கண்டியில் இன்று வாகன சத்தங்களைவிட ஹெலிகொப்டர் சத்தங்கள் தான் அதிகம் கேட்கின்றன. அப்பா, மகன், மாமா, மருமகன், சித்தப்பா, பெரியப்பா என முழுக் குடும்பமும் தேர்தல் பிரசாரத்துக்காக கண்டியில் பறந்த வண்ணம் உள்ளனர். ஒருவர் மாறி ஒருவர் ஹெலிகொப்டரில் வந்து இறங்குவதும்,ஏறுவதுமாகவே உள்ளனர். அந்தளவுக்கு மக்களின் பணம் குடும்பத்தின் தேர்தல் பிரசார பயணத்துக்காக வீணடிக்கப்படுகின்றது.இதற்கு நிச்சயம் கண்டி மக்கள் நல்ல பதில் அளிப்பார்கள் என்று நினைக்கின்றேன். இன்று இந்த நாட்டின் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட இந்த அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடுகளை நன்கு உணர்ந்து அதனால் கவலை அடைந்தவர்களாகவே காணப்படுகின்றனர். இதை அண்மையில் நாம் அவர்களைச் சந்தித்தபோது தெரிந்து கொள்ள முடிந்தது என்று அஸாத் சாலி கூறினார்.

yes leader, your always best and better than our foolish leaders. till now no one object for the statement of godapaya, they all scared for this human being, while he insulting all the muslims as terrorist all being quit. no one ready to object his foolish opinion.
ReplyDeleteWe salute your courage and commitment towards the Muslim ummah in Sri Lanka. Gota & his family is determined to suppress all Muslims in Sri lanka and this BBS is the first step to that. Oh SO CALLED MULIMS LEADERS IN SRI LANKA! DO YOU AGREE WITH THE STATEMENT MADE BY THIS GOTA IN HIS SPEECH??? IF SO, CAN YOU POINT OUT TO THE COMMUNITY WHERE IT HAS GONE WRONG OR WHERE ARE THE EXTREMISTS AMONG MUSLIMS?? NO ONE SHOULD VOTE FOR THIS REGIME IF ONE HAS A REAL FEELING TOWARDS THE COMMUNITY.
ReplyDeleteSTILL WE ARE WAITING FROM THE HONOURABLE MUSLIM MINISTOR'S STATAMENT. WHERE ARE THEY?
ReplyDeleteஅல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக!அத்துடன் உங்களுக்கு பாதுகாப்பும் வழங்குவானாக! ஆமீன்!!!
ReplyDeleteசமூக நலனில் அக்கறை கொண்ட நீங்கள்,கூடுதலான வாக்குகளுடன் மத்திய மாகாண சபை உறுப்பினராக வருவதற்கு முஸ்லிம் சமூகம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்!
ReplyDeleteஅல்லாஹ் ஈருலக வாழ்கையிலும் உங்களுக்கு வெற்றியை வழங்குவானாக!!!
ASHATH SIR WAIT PEOPLE WILL TEACH THEM SPECIALLY KANDY PUBLIC UR THE NEXT MAYOR FOR CENTRAL PROVINCE
ReplyDeleteஇன்று அசாத் சாலி அவர்கள் பல கருத்துக்களை தைரியமாக கூறி வருகிறார் அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக,உங்களின் இந்த வேகத்திற்கும், விவேகத்திற்கும் இன்றைய இளம் சமுதாயத்தினரையும் உங்களோடு அழைத்து, அரவணைத்து அவர்களும் எதிர்கால சந்ததியினருக்காக குரல் கொடுக்க கூடியவர்களா வளர்த்தெடுக்க வேண்டும். இன்றைய இளஞர்கள் நாளைய தலைவர்கள்
ReplyDelete