Header Ads



ஆசியாவில் கைப்பற்றப்பட்ட அதிகளவு போதைப் பொருள் - இலங்கை சுங்கப் பிரிவு விசாரணை

(Nf) அண்மையில் கைப்பற்றப்பட்ட பெருமளவு ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் சர்வதேச சுங்க வலையமைப்பை தெளிவூட்ட இலங்கை சுங்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய சர்வதேச சுங்க வலையமைப்பும் அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அத்தியட்சகர் நிஹால் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் கைப்பற்றப்பட்ட அதிகளவு போதைப் பொருள் இதுவென்பதுடன் தொடர்ந்தும் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் உலகின் எந்தவொரு பகுதியிலும் இந்தளவு போதைப் பொருள் கைப்பற்றப்படவில்லை, கடந்த காலங்களில் இவ்வாறு பெருமளவு போதைப் பொருள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தா? என்பது தொடர்பிலும் சுங்க அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கைகக்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெறும் வகையில் அவர்களுக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்  நிஹால் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் அரசுடமையாக்கப்பட்டதாகவும் சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

நிஹால் அழகப்பெரும :-
''அதன் மாதிரிகளை அரச இரசயான பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருள் பிரவுன் ஷுகர் ரகத்தைச் சேர்ந்த மிகவும் விலை உயர்ந்த போதைப் பொருள் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் மூலம் அதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு எண்ணியுள்ளோம். போதைப்பொருள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது''.

No comments

Powered by Blogger.