விக்கிரமபாகு கருணாரத்ன மீது ஆயுதக் குழு தாக்குதல்
புத்தளம், நுரைச்சோலையில், நவசமசமாசக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, நேற்றிரவு அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாணசபைத் தேர்தலில், தேசிய ஐக்கிய முன்னணியின் கீழ் போட்டியிடும் தமது கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக, துண்டுபிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த போதே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில், புத்தளம் மாவட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் மருத்துவர் பெரொஸ் காயமடைந்துள்ளார்.
அரசாங்க தரப்பு குண்டர்களே தம்மீதும், தமது ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment