Header Ads



கடும்போக்குவாதத்திற்கு எதிராக உலக அளவில் நடவடிக்கை வேண்டும் - கோத்தா

(Gtn) கடும்போக்குவாதத்திற்கு எதிராக உலக அளவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிராந்திய மற்றும் உலக அளவில் கடும்போக்குவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தொடர்ந்தும் கடும்போக்குவாத சவால்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். கடும்போக்குவாதத்திற்கு எதிராக சர்வதேச நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் அது நாடுகளின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என கோதபாய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாதம், தீவிரவாதம், கடும்போக்குவாதம் ஆகியவற்றுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதனை சார்க் பிராந்திய வலய நாடுகள் கூட்டாக இணைந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

2 comments:

  1. கடும்போக்கு வாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் ஐயா எங்கு போய் ஒழிந்து கொள்வீரோ? இனிமேல் அமேரிக்காவுக்குபோனாலும் ஆப்புதான் இலங்கையில் இருந்தாலும் ஆப்புதான். இன்ஸா அல்லாஹ் எல்லாம் வல்லவன் உதவியுடனும் எங்கள் பொறுமையுடனும் ஒரு முடிவு வராமலா போய்விடும்.

    ReplyDelete
  2. நல்ல விடயம்தான், வரவேற்கிறோம், அந்த வகையில் முதல் முதலில் உங்கள் பொது பல சேனாவுக்கும் சிங்கள ராவயவுக்கும் இன்னும் பல பௌத்த அமைப்புகளுக்கும் எதிராக நடவடிக்கை உங்களால் எடுக்க முடியுமா? பகிரங்கமாக வீதியில் வலம் வந்த இந்த கடும்போக்கு அமைப்புக்களை உலகமே பார்த்தது, இனியும் ஏன் மௌனம்?

    ReplyDelete

Powered by Blogger.