Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து பிரதமரிடம் கவலை தெரிவிப்பு

இந்தியா - உத்தரப்பிரதேசத்தில் நடந்த வகுப்பு வாத வன்முறைக்கு 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நாட்டில் பெருகி வரும் இனமோதல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜமாத் இ உலெமா இ ஹிந்த் தலைவர் மெஹ்மூத் மதானி தலைமையில் முஸ்லிம் தலைவர்கள் 15 பேர் 16-09-2013 பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர்.

30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உத்தரபிரதேச முசாபர்நகர் மாவட்டத்தில் நடந்த வன்முறை மற்றும் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து பிரதமரிடம் கவலை தெரிவித்தனர். அப்போது வகுப்பு வாத வன்முறைக்கு எதிராக சட்டம் கொண்டுவரவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதுகுறித்து பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் முஸ்லிம் மக்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாக கவலைதெரிவித்து முஸ்லிம் தலைவர்கள் இன்று வகுப்புவாத வன்முறை மசோதா கொண்டுவரவேண்டும் கேட்டுக்கொண்டனர். வரும் 23-ம் தேதி தேசிய ஒருங்கிணைப்பு சபையின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறோம்.

அக்கூட்டத்தில் இப்பிரச்சினை பற்றி கவலைகள் எழுப்பப்படும். உங்கள் கவலைகள் குறித்து அப்போது பேசப்படும். நாட்டிலுள்ள அனைத்து சமுதாய மக்களையும் காப்பற்றுவதை உறுதிபடுத்தும் விதமான நடவடிக்கைகள் அரசு நிச்சயம எடுக்கும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.