Header Ads



தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இனவாத அறிக்கை - ரட்ணசிறி விக்ரமநாயக்க

(Tm) தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இனவாத அறிக்கையாகும், மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி நாட்டை பிரிக்கும் முயற்சியாகவே அந்த விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள்  அமைந்துள்ளன. என்று சுட்டிக்காட்டியுள்ள நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் சிரேஷ்ட அமைச்சர் ரட்ணசிறி விக்ரமநாயக்க அந்த அறிக்கை தொடர்பில் சகலரும் விழிப்பாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நாடு சகலருக்கும் உரித்துடையது. நாட்டில் அந்த பகுதி இந்த இனத்திற்கும் மற்றைய பகுதி இந்த இனத்திற்கும் உரித்துடையது என்று பிரிக்கமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அந்த அறிக்கையில் தனிநாடு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பில் பேசப்பட்டுள்ளது. தன்னாட்சி தொடர்பில் பேசப்பட்டுள்ளது. அதிலிருந்து என்னத்தை அவர்கள் கூறவிரும்புகின்றனர் என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பைச்சேர்ந்த மற்றொருவர் ஆயுதத்தை கையில் எடுக்கவேண்டுமென்று கூறுகின்றார். இவ்வாறான நிலையில் நமக்கு காண்பிக்கும் சமிக்ஞை சரியில்லை இவைத்தொடர்பில் நாமெல்லாம் விழிப்பாக இருக்கவேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.