'வளமான தேசத்தை கட்டியொழுப்ப போஷக்கு நிறைந்த இளையோர் சமூகத்தை உருவாக்குவோம்'
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
'வளமான தேசத்தை கட்டியொழுப்ப போஷக்கு நிறைந்த இளையோர் சமூகத்தை உருவாக்குவோம்' எனும் திட்டத்திற்கமைவாக கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் பசும்பால் கொதிக்க வைக்கும் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வுகள் ரிதிதென்ன கால் நடை வைத்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் நடை பெற்றது.
ஓட்டமாவடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.சுபைர் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட ஓட்டமாவடி கோட்டக்கல்வி அலுவலகத்திற்குற்பட்ட ஏழு பாடசாலைகளுக்கு 20,000 ஆயிரம் ரூபாய் பொறுமதியான பசும்பால் கொதிக்க வைக்கும் இயந்திரம் ஒவ்வொன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ரிதிதென்ன கால் நடை வைத்திய அலுவலகத்தின் வைத்திய அதிகாரி கே.பீ.எஸ்.ரீ.ஹேவா படேகே,கால் நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.ஏ. ஹாரிஸ் உள்ளீட்ட அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
பசும்பால் கொதிக்க வைக்கும் இயந்திரத்தினை மட்-பிறைந்துறைச்சேனை அஸ்கர் வித்தியாலய பிரதி அதிபர் அலியார் அவர்களிடம் 1வது படத்திலும் மட்-செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலய அதிபர் எம்.சுபைதீன் அவர்களிடமும் 2வது படத்தில் அதிதியாக கலந்து கொண்ட ரிதிதென்ன கால் நடை வைத்திய அலுவலகத்தின் வைத்திய அதிகாரி கே.பீ.எஸ்.ரீ.ஹேவா படேகே,கால் நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.ஏ. ஹாரிஸ் ஓட்டமாவடி கோட்ட கல்விப்பணிப்பாளர் ஆகியோர் கையளிப்பதனை படங்களில் கானலாம்.
Post a Comment