Header Ads



சிங்கள, தமிழ் தலைவர்களே இனவாதத்தை தூண்டி நாட்டை யுத்தத்திற்கு தள்ளிவிட்டனர்

சிங்கள மற்றும் தமிழ் இனவாத தலைவர்களே இனவாதத்தையும் தேசிய வாதத்தையும் தூண்டி நாட்டை யுத்தம் ஒன்றை நோக்கி தள்ளி விட்டனர்.  30 வருட போரில் தமிழர்களும், சிங்களவர்களும் கடும் பாதிப்புகளை அனுபவித்தனர்.  சிங்கள இனவாத தலைவர்கள் தெற்கில் சிங்கள இனவாததத்தை போஷித்து வாக்குகளை பெறுவது போன்று,  வடக்கிலும் இடம்பெற்றது  என  அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தான் மத, இன, குல பேதங்களை தாண்டி மனிதன் என்ற விடயத்தை ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்பிற்காக குரல் கொடுப்பவன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 30 வருடங்களில் அவ்வப்போது நான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வந்துள்ளேன்.  வடக்கில் அரசியல் தலைவர்கள் மாத்திரமின்றி ஆயுத அமைப்புகளின் தலைவர்களையும் சந்தித்து  பிரச்சினையை சமாதானமாக தீர்ப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினேன்.  1988 ஆம் ஆண்டு எம்மை கொலை செய்ய போவதாக எச்சரித்த போதிலும் மாகாண சபைக்காக போராட்டங்களை நடத்தினோம்.  அன்று இருந்த நிலைப்பாட்டிலேயே நான் இன்றும் இருக்கின்றேன்.  தேசிய ஐக்கியத்திற்காக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும்.

2 comments:

  1. இனவாதத்தை பேசும் யாரையும் நாம் எதிர்க்கும் பழக்கத்தை வழக்கத்திற்கு கொண்டு வருவதன்மூலம் அதை அடியோடு இல்லாமல் ஆக்குவோம்.

    நாடும் உலகமும் இனிமேல் திருந்தப்போவதில்லை காலம் செல்லச்செல்ல நிலவரம் இதைவிட மோசமான நிலைக்குள்ளாக்கப்படும்.

    ReplyDelete
  2. சிங்களம் - தமிழ் என்று மாறி இப்போ சிங்களம் - முஸ்லிம் இனவாதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் தெற்கின் இனவாதிகள்

    ReplyDelete

Powered by Blogger.