Header Ads



விரைவில் கோத்தாபய ராஜபக்சவை சந்திப்போம் - சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்

ஹலால் சான்றிதழ் தொடர்பாக தமக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால், ஹலாலுக்கு எதிரான போராட்டத்தை மீள ஆரம்பிக்கப் போவதாக சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனா எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பொது பல சேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரர்,

“தாம் ஹலால் விவகாரத்தைக் கவனித்துக் கொள்வதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்ததை அடுத்தும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டதை அடுத்தும், ஹலாலுக்கு எதிரான பரப்புரைகளை நிறுத்தியிருந்தோம்.

எமது உறுப்பினர்கள் தெரிவுக்குழு முன்தோன்றி சாட்சியமளித்தனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை சந்திப்போம்.

அதற்குப் பின்னர், ஹலால் சான்றிதழ் நடைமுறைக்கு எதிரான பரப்புரைகளை மீளத் தொடங்குவது குறித்து முடிவெடுப்போம். கண்டியில் இம்மாத இறுதியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

5 comments:

  1. මැරිලා පලයන්

    ReplyDelete
  2. நீ செத்ததான் நாட்டுக்கு நின்மதி
    பன்சலைல படுக்குறவன் BMW கார்ல திரியுறான் இவன் இருந்து என்ன செத்து என்ன. bloody baker

    ReplyDelete
  3. HALAAL VIDAYATTHIL THAAN IVARKAL PIRAFALYAM AAGINAR MATRA VIDAYANGKAL VETRIYAI KODUKKA VILLAI ENAVE MEENDUM ITHAI THOOKKI PIDIKKINRANAR....

    ReplyDelete
  4. WHO CARES... NEENGA SETTHA NAADU URUPPADUM

    ReplyDelete
  5. 1 - ஓஹ் அரசு எங்கழுக்கு சார்பாக இல்லை என எடுத்துக்காட்டத்தான் இந்த தகவல் போலும்
    2 - தம் ஆலோசனைகளை ஆசீர்வாதிக்கும் ஓர் தலைவனாய் கோத்தா செயற்படுகிறார் என தெரிவிக்கிறார் போலும்

    ReplyDelete

Powered by Blogger.