Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தைக் குழப்ப முனாஜித் மௌலவி முயற்சி

(முஸ்லிம் காங்கிரஸ் ஊடக பிரிவு)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான  ரவூப் ஹக்கீம், வவுனியா மாவட்டத்தில் மாங்குளம், நேரிய குளம் கிராமத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்று அங்கு உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது ஒரு வெள்ளைநிற வேன் வந்து நின்றது. அதில் இருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அண்மையில் பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பாளராக போட்டியிடும் முனாஜித் மௌலவி என்பவர் அறங்கி மேடையை நோக்கி சத்தமிட்டவாறு வந்து கூட்டத்தைக் குழப்ப முற்பட்டார்.

ஆப்போது அங்கு குழுமியிந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அவரைக் கூக்குரலிட்டு நையப்புடைத்து அங்கிருந்து வெளியேற்றினர். அவர் தனது சகோதரருடனும் சகபாடிகளுடனும் தாம் வந்த வெள்ளை வேனில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.

அப்பொழுது அவரை கைது செய்யுமாறு பொலீஸ் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கும்படி அங்கு கூடியிருந்த மக்கள் அமைச்சர் ஹக்கீமிடம் கூறியபொழுது அவரைச் சிறைச்சாலைக்கு அனுப்புவதைவிட, மனநல மருத்துவ மனைக்கு அனுப்புவதே சிறந்தது என அமைச்சர் ஹக்கீம் நகைச்சுவையாகப் பதிலளித்தார். அத்துடன் கட்சிக்கு குழிபறித்துச் சென்று சோரம்போனவர் ஒரு மௌலவியாக இருந்தும் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டமை உலமாக்களுக்கே இழுக்கையும் அவமானத்தையும் ஏற்படுத்தும் செயலாகும் என்றார்.

உடனடியாக கலகமடக்கும் பொலீசார் அங்கு விரைந்து வருவதற்கிடையில் அவர் தப்பிச் சென்று விட்டார்.

No comments

Powered by Blogger.