உலகில் மிக மோசமானது இலங்கை அரசாங்கமே - மங்கள சமரவீர
உலகில் உள்ள மிகவும் மோசமான அரசாங்கங்களில் ஒன்றாக இலங்கை அரசாங்கம் மாறி இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மிகவும் மோசமான அரசாங்கமாக இந்த அரசாங்கம் மாறியுள்ளது. இதன் அபிவிரித்தி நடவடிக்கைகள் அனைத்தும் போலியானவை. அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களே அரசாங்கத்தை வெறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு எதிரான பல அமைச்சரவை பத்திரங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

அவ்வாறான பத்திரிகைகளுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாத அமைச்சர்கள், நீங்களாவது இதற்கு எதிராக குரல் எழுப்புங்கள் என்று கோரி, அந்த அமைச்சரவை பத்திரங்களை ஐக்கிய தேசிய கட்சியிடம் வழங்கிவருகின்றனர். இவ்வாறான நூற்றுக் கணக்கான பத்திரங்கள் தற்போது கைவசம் உள்ளன என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
Post a Comment