காலி பள்ளிவாசலில் பணம், பொருட்கள் திருட்டு
(TL) காலி மஹகபுகல் சிறிய முஸ்லிம் பள்ளிவாசலில் அறையொன்று உடைக்கப்பட்டு 20 ஆயிரம் ரூபா பணமும் பெறுமதியான பொருட்களும், திருடப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மௌலவியின் அறையை உடைத்தே பணமும் பொருட்களும் திருடப்பட்டதாக மௌலவி செய்யிது முஹம்மத் பதியுதீன் பொலிஸில் புகார் செய்துள்ளார். இது குறித்து காலி பொலிஸார் விசாரணைகளை நடத்தியபோதும் இதுவரை எவரும் கைதாகவில்லை. விசாரணை இடம்பெற்றுவருகின்றது.
Post a Comment