மனைவியை தேடும் பெண்
பாகிஸ்தானில், கணவருடன் வசித்த பெண், தற்போது, தனக்கொரு மனைவியை தேடி வருகிறார். பாகிஸ்தானின், சிந்து மாகாணத்தில் உள்ள காசியாபாத்தை சேர்ந்தவர் நகினா. இவரது கணவர் காலீத். ஸ்பெயின் நாட்டில், காலீத் பணிபுரிகிறார். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, மனைவி நகினாவை வந்து பார்த்து செல்வார். திருமணமாகி, இரண்டு ஆண்டுகள் ஆகியும், நகினாவுக்கு குழந்தை இல்லை. மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் படி, கணவர் காலீத் வற்புறுத்தினார். இதையடுத்து, மகப்பேறு மருத்துவரை அணுகினார் நகினா. இவரை பரிசோதித்த உள்ளூர் டாக்டர், நகினாவை பெரிய மருத்துவமனைக்கு செல்லும் படி அறிவுறுத்தினார். கராச்சி மருத்துவமனையில், நகினாவை பரிசோதித்த டாக்டர்கள், அவரிடம் ஆண் தன்மை அதிகம் உள்ளதாக தெரிவித்தனர். எனவே, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் படி அறிவுறுத்தினர். இதற்கு ஏற்றார் போல், நகினாவின் முகத்தில் முடிகள் வளர்ந்துள்ளது.
இந்த விஷயத்தை கணவர், காலீத்திடம் தெரிவித்தார். இதை கேள்விப்பட்டது முதல் காலீத், நகினாவை பார்க்க வரவில்லை. நகினாவிடம் பெற்ற வரதட்சணையை, காலீத் குடும்பத்தினர் திரும்ப கொடுத்து விட்டனர். கிடைத்த பணத்தை வைத்து, நகினா, தற்போது, காசியாபாத் பேருந்து நிலையத்தில், டயர் கடை நடத்தி வருகிறார். தனியார் மருத்துவமனையில், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நகினா தற்போது, "உஸ்மான் அக்ரம்' என, பெயரை மாற்றிக்கொண்டார். இந்த பெயரில், அடையாள அட்டையையும் பெற்று விட்டார். தனக்கேற்ற பெண்ணை தற்போது தேடி வருகிறார்.
Post a Comment