Header Ads



நவநீதம்பிள்ளையை மேர்வின் சில்வா திருமணம் முடிக்க விரும்புவது பாரிய தவறு

(Adt) ஐநா மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளை தனது இலங்கை விஜயத்தின் இறுதியில் மேற்கொண்ட உரையில் முன்வைத்த 6 கருத்துக்கள் தொடர்பில் அவருக்கு நன்றி தெரிவிப்பதாக இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உபசரணை, புலிகள் படுகொலை இயக்கம், வடக்கு புனர்வாழ்வு நடவடிக்கை, வடக்கில் தேர்தல் நடத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து நவிபிள்ளை முன்வைத்த கருத்துக்களுக்கே அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

நவிபிள்ளை இலங்கைக்கு வரவழைக்கப்பட்டதன் மூலம் நாட்டின் ஜனநாயகம் குறித்து தெளிவான செய்தி கூறப்படுவதாக கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய டளஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டினார்.

நவிபிள்ளையை திருமணம் முடிக்க விரும்புவதாக அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்ட கருத்துக்கு டளஸ் அழகப்பெரும தனது கவலையை வெளியிட்டார்.

நவநீதம்பிள்ளை தமது தாயைவிட ஓரிரு வயதே குறைவானவர். அவ்வாறிருக்கையில் அவர் தொடர்பில் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடுவது பாரிய தவறானது என அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 1987ம் ஆண்டுக்குப் பின்னர் செப்டெம்பர் 17ம் திகதி யாழ்தேவி ரயில் கிளிநொச்சிக்கு செல்லவிருப்பதாக டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.