பிறைக் குழு ஒன்று போதுமானது..!
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஒரு பிறைக் குழுவைத் தெரிவு செய்திருப்பதாகவும், அதன் உறுப்பினர்களின் பெயர் பட்டியலையும் அறிவித்திருந்தது.
நீண்ட நெடுங்காலமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் இணைந்து முஸ்லிம் சமய, கலாச்சார அலுவலகம், கொழும்பு பெரிய பள்ளி பிறைக் குழு மேற்படி நற்காரியத்தை செய்து வருகின்றனர். அவர்களுடன்; ஆலிம்கள், ஷரீஆ கவுன்ஸில், மேமன் சங்கம், தஃவா அமைப்புக்கள் கைகோர்த்து செயற்படுகின்றன என்பது நாம் அறிந்த உண்மையாகும்.
இவர்களது இப்பாரிய பணியினை சமூகம் நன்றி உணர்வுடன் நோக்க வேண்டும். ஓவ்வொரு மாதமும் பிறை பார்க்கும் மாநாட்டினை இவர்கள் தவறாது செய்து வருகின்றனர். இவர்களுக்குத் துணையாக முஸ்லிம் வானியல் அறிஞர்களும் உள்ளனர்.
இதுகால வரை செய்யப்பட்டு வரும் மேற்படி நற்காரியத்தைக் குழப்பியடிக்க பலர் கங்கணம் கட்டிய வண்ணம் இருந்தனர். இவர்களது எதிர்பார்ப்புக்கமைய கடந்த ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை தீர்மாணத்திலும் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுவிட்டன. 'குருவியும் அமர, பலாக்காயும் விழுந்தது' என்ற கதையாகிவிட்டது. இதனை வெடிக்கச் செய்தவர்களில் முக்கிய பங்கெடுத்தவர்கள் மேற்படி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர்தான்.
இவர்களுக்கும் தேசிய பிறைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பது பலருக்கும் ஐயத்தையே ஏற்படுத்தியுள்ளது. தலைமை விடும் பிழைகள் என்னும் இவர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையை ஏற்றிருந்தார்களா?
மதிப்புக்குறிய அஷ் ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் (மதனி) அவர்களையும், அஷ் ஷைக் எம்.ஐ.எம். றிஸ்வி (முஃப்தி) அவர்களையும் பிறைக் குழுவையும் திட்டித் தீர்த்த இவர்கள், தமது கொள்கையை ஏற்காதவர்களான அமைப்புக்களையும், ஆலிம்களையும் ஏற்றுக் கொள்ளத இவர்கள் எப்படித் தலைமையைப் பற்றிப் பேசலாம்?
முழு முஸ்லிம் சமூகத்தையும் வழிகேடர்கள் என்று பகிரங்கமாகச் செல்லும், எழுதும் இவர்கள் யாருக்குப் பிறையைப் பற்றி அறிவிக்கப் போகிறார்கள்? வழிகேடர்களுக்கா?
சமூகத்தைப் பிளவு படுத்துவதில் சிலருக்கு அமோக ஆனந்தம். நாட்டு நடப்புக்களையும் சமூகம் எதிர் கொள்ளும் ஆபத்துக்களையும் கருத்திற் கொண்டு, தனக்கொரு பிறைக் குழு என்ற மேற்படி வாதத்தினை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கைவிட வேண்டும் என அன்பாயக் கேட்டுக் கொள்கின்றோம்.
நீங்கள் சார்ந்த அமைப்பினருக்கு நீங்கள் விரும்பும் முறைகளில் எதையும் அறியப்படுத்துங்கள். அவர்களுக்கு உங்கள் இணையத் தளம் மாத்திரம் போதுமானதல்லவா? அப்படியாயின் தேசிய ரீதியில் பிறைக் குழு எதற்காக? தேசிய பத்திரிகையில் எதற்காக?
நளீமிகளைத் துற்றும் இவர்களுக்கு அஷ் ஷைக் ஜாபிர் நளீமி மாத்திரம் எப்படி நம்பகமானவரானார்? ஜம்இய்யத்துல் உலமாவினை ஏற்காத இவர்களுக்கு கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா மாத்திரம் எப்படி சரியாகப் பட்டது? அதன் தீர்மாணம் எப்படி நம்பகத் தன்மை கொண்டதாக மாறியது?
எனவே, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் இணைந்து முஸ்லிம் சமய, கலாச்சார அலுவலகம், கொழும்பு பெரிய பள்ளி பிறைக் குழு, மற்றும் அவர்களுடன் இணைந்திருக்கும் தகுதியான ஆலிம்கள், ஷரீஆ கவுன்ஸில், மேமன் சங்கம், தஃவா அமைப்புக்கள் கைகோர்த்து செயற்படுகின்ற பிறைக் குழு ஒன்று போதுமானதாகும். இவற்றின் தீர்மாணமே தேசிய பிறையை மையமாகக் கொள்பவர்களுக்கு அதிகாரமிக்க ஏக முடிவாகும்.
அத்துடன், சர்வதேசப் பிறையை அடிப்படையாகக் கொண்டு செயற்படுபவர்கள் அவர்கள் விரும்பும் விதத்தில் சமூக ஐக்கியத்துக்கு பாதிப்புக்கள் ஏற்படா வண்ணம் செயற்படலாம். எனினும், சர்வதேசப் பிறையைத் தீர்மாணிக்கும் அதிகாரமுடைய எவரும் எங்கும் இல்லை என்பதுவும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.
சென்ற முறை பிறை கண்டதில் சற்று சறுகல் நிலை இருந்தது உண்மைதான் அதற்காக காலாகாலமாக் செய்தவர்களை தூக்கி வீசுவதென்பது எக்காரணத்தைக்கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது. சமுதாயதை பிரிக்கும் எந்த நடவடிக்கைக்கும் துணைபோவது சாத்தியமானதல்ல அத்துடன் நமது குறிக்கோள்களை வென்றெடுப்பது கடினம். அத்துடன் நாளுக்கு நாள் நேரத்துக்கு நேரம் வித்தியாசமான பிறைகாணல் விதங்களை அறிமுகப்படுத்தும் தெளகீத் ஜமாத்தினரை எப்படி நம்பி கால்வைப்பது.
ReplyDeleteWho is that மேமன் சங்கம?
ReplyDeleteI've heard only வருத்தப்படாத வாலிபர் சங்கம். Can u explain bit. Rizvi shab also told they went to kinniya to enquire those people.
neengal kooruwazu unmai. Ivarkhalin kolhai 100% kuranukkum sunnawukkum muran. So can you please clarify how their monotheism is conflicting the Isalm please?. So people know clear picture of this.
ReplyDelete"Ivarhal thaan bid'ath waazihal. Mattre iyakkangal alle" enru neroopippavarhalukku 10000/- shanmaanam valangappadum. Wallahi
Vilakkam kuraan saheeh hadees adippadaiyil maattiram irukka wendum.
meman yenral yar ethuvarai kelvippadathavar kal avarkal than piraiyaiththirmanippavarkala
ReplyDeleteகடந்த பிறை பற்றிய பிரச்சினை தோலுரித்துக் காட்டப்பட்டுவிட்ட பிறகும், தப்பு தப்புதான் என நிரூபிக்கப்பட்ட பின்னரும் தௌஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பதற்கென்றே எழுதபட்ட ஆக்கமாகவே இதனை உணரமுடிகிறது. எலிவாலைக்கொண்டு கடலாழத்தை காணமுடியாது என்பதை உணர்ந்துகொண்டால் சரி.
ReplyDeleteACJU only should take the responsibility on dividing the community, it has boneless leaders, doesn't know how to lead the community and solve the problems.
ReplyDeleteநீங்கள் புரிந்த தவறை எப்போது உணர்வது?
ReplyDeleteவீண் விதண்டா வாதங்களை விட்டு எல்லோரும் ஒற்றுமையுடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும்.முன்னர் முஸ்லிம் அல்லாதவர்கள் "முஸ்லிம்களைப் போல் ஒற்றுமை எங்களிடம் ஒற்றுமையில்லை" என்று கூறிய காலம் போய் " சிங்களவரிடம் உள்ள ஒற்றுமையேய் போல் முஸ்லிம்கள் ஆகிய எங்களிடம் ஒற்றுமையில்லையே" என்று கூறவேண்டிய காலம் வந்துவிட்டது.
ReplyDeleteதிட்டமிட்ட இஸ்லாத்தின் எதிரிகள் தான் இந்த மேமன் சங்கமும் மற்றும் உள்ள இயக்கங்களும் தவ்ஹீத்வாதிகளைத்தவிர(குர்ஆன் மற்றும் தூய்மையான ஹதீஸ்கள் மட்டும் தான் இஸ்லாம் என்போர்)ஆக தவ்ஹீத் ஜமாத்தை நம்பலாம் எதுவரை என்றால் குர்ஆன் மற்றும் தூய்மையான ஹதீஸ்கள் மட்டும் தான் இஸ்லாம் என்ற கொள்கை அவர்களிடத்தில் இருக்கும் வரை.
ReplyDeleteMr. Nagoor Lareef! you are behind the thableeq jamaath. so your your brain became very small. so you don't know about this. so keep shutting, ok
ReplyDeleteநாகூர் ழபீப் well said
ReplyDeleteஇதுவரை காலமும் ஏற்றுக்கொண்ட தலைமை அகில இலங்கை ஜம்மிய்யதுள் உலமா சபை தற்போதைய சவுதிக்காசுக்கு அடிமையான புதிய உலமாக்களால் சிதறடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தஹைய உலமாக்கள் முதலில் சவுதியிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பணத்தை விடச்சொல்லுங்கள் அதன் பிறகு இப்படிப்பட்ட தௌஹீத் ஜமாஅத் உலமக்களைப் பின்பற்றலாம். மருதமுனையைச் சேர்ந்த முபாரக் மௌலவி ஒரு ஆசிரியர் ஆக இருந்துகொண்டு எவ்வாறு காணி வாங்கி மாடி வீடு கட்ட முடியும் என்பதை சொல்ல சொல்லுங்கள் அவர் தனது குத்பா உரையில் குறிப்பிட சொல்லுங்கள்.
ReplyDeleteThis ACJU know well to surrender to the government, specially to that rubbish Godapaya, they are very expert on it. see what this rubbish Godapaya said in the military seminar, he saying there is muslims terrorism growing in the island. what he mean by this? cant you peoples understand who operating this bodu bala sena, ravaya and etc? till you peoples gonna be surrender and loosing our rights?
ReplyDeleteNONBU perunaal kondadiyathum sari, NONBU pidithathum sari endu sollum ACJU Ean? SLTJ Piraikkuluwum sari endu solla mudiyaathu.
ReplyDeleteA General History of the Memons
ReplyDeleteThe Memons are perhaps one of the most widely dispersed peoples. This erstwhile mercantile community having its roots in Northern India have gone far and wide in search of greener pastures, settling down in new lands and founding colonies, not by force of arms like the conquerors of old but in pursuit of that rare business acumen so characteristics of this enterprising and industrious race.
Memons are today found in large numbers in Karachi, Pakistan and Mumbai, Surat, Madras, Dhoraji and Hyderabad in India. Sizeable communities are also found in South Africa, particularly Pretoria, Pietersburg and Pietermaritzburg, Burma, Bangladesh and Sri Lanka. Yet others are scattered over the United Kingdom, United States and in various parts of Western Europe, particularly Portugal.
The total Memon population in the world is estimated at over 1 million persons with the vast majority living in the Indian subcontinent, i.e. modern-day India (550,000), Pakistan (415,000) and Bangladesh (3000) followed by South Africa (25,000), the United Kingdom (22,000), Sri Lanka (6000) and Burma (5000).
We propose to give here a brief sketch of the origins and the early history of the Memons as a community before proceeding to follow them on their sojourns to distant lands including that fair isle the Arabs of the old knew as Saylan. It was Saylan, now known as Sri Lanka that the forbears of the modern-day Memons of the island flocked in days gone by, here again in pursuit of their favourite calling – trade.
10000/- shanmaanatthukku Naakooor Thayaara?
ReplyDelete