Header Ads



யாழ்தேவியில் முதல் பயணியாக கிளிநொச்சி சென்ற மகிந்த (படங்கள்)

இந்திய உதவியுடன் புனரமைக்கப்பட்ட வடக்கிற்கான புகையிரத பாதையில், கிளிநொச்சிக்கான யாழ்தேவி தொடருந்து சேவையை இன்று காலை மகிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைத்துள்ளார்.

ஓமந்தையில் இருந்து  இன்று காலை 9.30 மணியளவில் புறப்பட்ட யாழ்தேவி தொடருந்தில் அவர் முதல் பயணியாக கிளிநொச்சிக்குப் புறப்பட்டுச் சென்றார். இந்தத் தொடருந்து காலை 10.15 மணியளவில் கிளிநொச்சியைச் சென்றடைந்தது.
 
அமைச்சர்களும், இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹாவும் சிறிலங்கா யாழ்தேவி தொடருந்தில் பயணத்தை மேற்கொண்டனர். 23 ஆண்டுகளுக்குப் பின்னர், கிளிநொச்சிக்கான தொடருந்து சேவை மீள ஆரம்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.