சிரியா மீது போர் தொடுக்க ஐக்கிய நாடுகள் ஒப்புதல் எனக்குத் தேவையில்லை - ஒபாமா
ரசயான ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்க தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிக்கையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் எனக்குத் தேவையில்லை என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார்.
சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, புரட்சிப் படையினர் அரசுக்கு எதிராக போராடி வருகின்றர். சிரிய அரசு, போராட்டக் காரர்களை இராணுவத்தைக் கொண்டு கடுமையாக தாக்கி வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 21ஆம் தியதி டமாஸ்கஸ் அருகே அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது ரசாயண குண்டுகள் வீசப்பட்டது. இத்தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்கா சிரியாவை தாக்கப் போவதாக அறிவித்து அதனுடைய நேச நாடுகளின் ஆதரவைக் கோரியது. ஆனால், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிரியா மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கைக்கு போதிய ஆதரவு கிடைக்காமல் தீர்மானம் தோல்வியடைந்தது. எனவே சிரியா மீதான தாக்குதலுக்கு தனது ஆதரவு இல்லை என்று இங்கிலாந்து அறிவித்து விட்டது.
இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் மட்டுமே அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ராணுவ உயரதிகாரிகளுடன் வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்திய பிறகு அமெரிக்க அதிபர் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசும் போது, " ரசாயன ஆயுதங்களை சிரிய அரசு பயன்படுத்தியதால், அதற்கு அதிபர் பஷார் அல் ஆசாத் பதில் சொல்ல வேண்டும். உலகளவில் ரசாயன ஆயுதம் தடை செய்யப்பட்ட நிலையில், சிரியாவின் செயல் இவ்விசயத்தை கேலிக் கூத்தாக்கி இருக்கிறது,
எனவே, அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்த தயாராக உள்ளது. இதற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் எனக்குத் தேவையில்லை. எல்லா நாடுகளும் இதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. நட்பு நாடுகளின் ஆதரவு இருந்தாலே போதுமானது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் மட்டுமே தேவைப்படுகிறது" என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்த சிரிய அரசு, "ஒபாமா அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதே அவர் தோல்வி பயத்தில் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது" என்று கூறியிருக்கிறது. Inne

நீங்கள் இரண்டுபேரும் ஒன்றுதான் இதில் யார் சுத்தம் யார்குத்தம் என்று பார்ப்பதற்கில்லை. சரி ஒபாமா தம்பி மற்ற மற்ற நாடுகளிலும் மனிதப்படுகொலைகள் நடக்கின்றதே நீங்க இத மட்டும் பிடித்துக்கொண்டு தொங்கக்காரணம் என்னவோ.
ReplyDeleteஆமா...மனிதப்படுகொலைகள் நடக்கிறது. அமெரிக்கா தலையிடப்போகும் நேரத்தில் எல்லாம் உலக ஏகாதிபத்தியமே எதிரில் வராதே....இஸ்ரேலிய அடிவருடியே அண்டாதே, பாலஸ்தீன எதிரியே பக்கம் வராதே என கொழும்பில் கோசம் போட்டோமில்ல......ஏன் ஞாபகம் வரேல்லியா?
ReplyDelete