Header Ads



பணிப்பெண்களின் குடும்ப பின்னணி கோரல் - உரிமைமீறல் அல்ல

(Sfm) பணிக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் குடும்ப பின்னணி அறிக்கை கோரும் நடவடிக்கையானது அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்லவென உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மனு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவரங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தொழிலுக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் குடும்ப அறிக்கையை பெற்றுக் கொள்ள வெளிநாடு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்திருந்தது.

எனினும், இதன் மூலம் வெளிநாடு செல்லும் பெண்களின் மனித உரிமை மீறப்படுவதாக கூறி மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணையை அடுத்தே மனித உரிமை மீறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.