வளர்ந்த நாடுகள், பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிடக்கூடாது - ஐ.நா.வில் மஹிந்த
இலங்கையில் மறுகுடியமர்த்தல் பணிகளில் மக்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை தரப்படவதாக மஹிந்த ராஜபக்சே கூறியுள்ளார். ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் 24-09-2013 (நியுயோர்க் நேரம்) இலங்கை அதிபர் ராஜபக்சே பேசியதாவது,
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க தேர்தலை நடத்தியது திருப்தியை தருகிறது.இலங்கையில் வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டியது வடக்கு மாகாண தேர்தல் முக்கியமானது. மறுகுடியமர்த்தல் பணிகளில் மக்கள் கருத்துக்கு முன்னுரிமை தரப்படுகிறது. மனித உரிமையின் காப்பாளராக வளர்ந்த நாடுகள் பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிடக்கூடாது. இலங்கையின் அனைத்து மக்களின் வளர்ச்சிக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும் என கூறினார்.
Post a Comment