பல்மட்டக் கற்பித்தல் தொடர்பான பயிற்சிச்செயலமர்வு
(மன்சூர்)
பல்தரமட்டக் கற்பித்தல் தொடர்பான பயிற்சிச் செயலமர்வு அண்மையில் கல்வியமைச்சின் உதவியுடன் தேசிய கல்வி நிறுவகத்தில் வதிடப்பயிற்சியாக நடைபெற்றது. இந்நிகழ்வு கிழக்கு மகாணத்திலுள்ள தமிழ் மொழிப் பாடசாலைகளில் அமுல்படுத்தும் நோக்குடன் இதுதொடர்பான செயலமர்வு வலயக் கல்விப் அலுவலகங்களில் சேவையாற்றும் ஆரம்பக்கல்வி இணைப்பாளர்கள், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களுக்காக நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வுகளில் ஆரம்பக்கல்விக்கான கல்வியமைச்சின் பணிப்பாளர் திருமதி ஆசோக பண்டிதசேகர தலைமையில் கல்வியமைச்சில் கடமையாற்றும் கல்விப்பணிப்பாளர்களான திருமதிகளான லலிதாம்பிகை, சபாரஞ்சன் மற்றும் கிழக்கு மாகாண ஆரம்பக்கல்விக்கான இணைப்பாளர் . எஸ். உதயகுமார் ஆகியோரை வளவாளராகக் கொண்டு இச்செயலமர்வு நடாத்தப்பட்டது.
சுமார் 40கல்வியதிகாரிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய கல்வியமைச்சின் ஆரம்பக் கல்விக்கான பணிப்பாளர் திருமதி அசோக பண்டிதசேகர,
இச்செயலமர்வின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தினார். குறிப்பாக வகுப்பறையில் பல்தர மட்டத்திலுள்ள மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கச் செய்வதற்கு இக்கற்றல் கொள்கை உதவியாக அமையும். கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க ஆரம்பக்கல்வி அதிகாரிகளான நீங்கள் உங்களுடைய ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கி மாணவர்களின் அடைவினை அதிகரிக்க உதவவேண்டும். கற்றல் உபகரணப் பயன்பாடுகளை தயாரித்து ஆரம்பத்திலிருந்தே மாணவர்களினது அறிவு, திறன், மனப்பாங்குகளை மேம்படுத்துவதற்கு இச்செயற்பாடு வெற்றிகரமாக அமையும். ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்படும் வகுப்பறைகள், கிராமிய மற்றும் கஷ்டப்பிரதேசப் பாடசாலைகளில் பெரும்பாலும் அவதானிக்கப்படுகின்ற கற்றல் கற்பித்தில் முறைகளை விளைதிறன் மிக்கதாக மாற்றுவதற்கும் இந்த செயற்பாடுகளை ஆசிரியர்கள் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த அடைவினை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
Post a Comment