Header Ads



மருதமுனை சமாதான சபையின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு


(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனை சமாதான சபையின் ஏற்பாட்டில் சமாதான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்ட மருதமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்றவர்களான  நூலகர் ஏ.எல்.எம்.ஏ.மஜிட், கல்விப்பணிப்பாளர் எம்.எச்.காதர் இப்றாகீம்,அதிபர் எஸ்.எம்.பீர்முகம்மது ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த நிகழ்வு அண்மையில் மருதமுனை அல்-மனார்மத்திய கல்லூரியில் கல்முனை பிரதேச செயளாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்றது. இதில் சிரேஸ்ட முகாமைத்துவ உதவியாளர் எஸ் எம் றபாயுதீன்,தாதி உத்தியோகத்தர்; பி.எம்.எம்.நஸ்றுதீன், சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,பிரதேச செயளாளர் எம்.எம்.நௌபல் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்ததனர்.


No comments

Powered by Blogger.