சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க முன்வருகின்றவர்களுக்கு ஆதரவாக இருப்போம்
மன்னார் மாவட்டத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறும் என்பதில் எந்தளவும் சந்தேகமில்லை என்று தெரிவித்துள்ள பொருளாதார பிரதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா வெற்றி பெருகின்ற அணியுடன் இணைந்து கொள்வோம் என்று அழைப்பும்விடுத்தார்.
மன்னார் உப்புக்குளத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று இரவு இடம் பெற்ற போது பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மன்னார் நகர சபை உறுப்பினர் எம்.நகுசீன் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் மேலும் பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளா பேசுகையில் கூறியதாவது,
நான் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல தமிழ்,முஸ்லிம் கிராமங்களுக்கு சென்றுவந்துள்ளேன்.இன்று மக்களிடம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.குறிப்பாக இரு வகையான இனவாதப் பிரசாரங்கள் இங்கு இடம் பெறுகின்றன.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்களிடம் போய் பள்ளிவாசல்களை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.அரசாங்கத்தின் அமைச்சராக இருந்து கொண்டு,ஜனாதிபதியுடன் அமைச்சரவையில் இருந்துவிட்டு,மாலை புத்தளத்தின் கூட்டத்தில் இந்த மஹிந்த ராஜபக்ஷ ஒரு இனவாதி,இவரது ஆட்சியை வீழ்த்த வேண்டும்,வெற்றிலைக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பேசுகின்றார்.இது அங்கே ஒரு நடிப்பு,இங்கே ஒரு நடிப்பினை ரவூப் ஹக்கீம் செய்கின்றார்.
உதாரணமாக நாங்கள் மரத்துக்கு வாக்களிப்பதன் மூலம் பொதுபாசேனாவை இல்லாமல் ஆக்க முடியும் என்றால் அதற்கு நாம் வாக்களிக்க முடியும்.மரத்துக்கு வாக்களிப்பதன் வெறும் வெற்றுப் பேச்சுக்களை பேசலாம்.வெறும் உணர்ச்சிகரமான பேச்சுக்களை பேசுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற முடியுமா என்றால் அது முடியாது என்ற பதிலை தான் தரும்.எங்களுக்கு தேவை பிரச்சினைகளுக்கான தீர்வேயன்றி உணர்ச்சிகளை ஊட்டுவதல்ல.நாங்கள் அரசியலை சமூகத்திற்காக செய்ய வேண்டும்.அரசியலுக்காக அரசியல் முடியாது.மேடைகளில் தோன்றி பேசிவிட்டு அதனை செய்யாமல் இருக்க முடியாது.மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.ஒன்று நாங்கள் செய்வதை பேச வேண்டும்.சமூகத்தின் விமோசனத்திற்காக நாங்கள் பேச வேண்டுமே தவிர பொய்யினை பேச கூடாது.
நான் இன்று முசலி பிரதேசத்திற்கு சென்றோம்.சன்னார் கிராமத்திற்கு சென்றோம்.அங்கிருந்த மக்கள் என்னிடம் சொன்னார்கள் மாந்தை பிரதேச சபையின் தலைவரிடம் எங்களுக்கு குடிதண்ணீர் வழங்க பவுசர் ஒன்றை பெற்றுத்தாருங்கள் என்று ஆனால் அதனை அவர்களால் வழங்க முடியாது என்று,இது தான் அவர்களது நிலை.கடந்த பிரதேச சபை தேர்தலில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் அதிகாரத்தை 300 வாக்குகளால் நாங்கள் இழக்க நேரிட்டது.எமக்கு கிடைக்க இருந்த சில வாக்குகளை ஸ்ரீலங்கா மஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள் எடுத்தமையினால் எமது சகோதரர் ஒருவர் தலைவராக வரும் சந்தரப்பத்தை இழக்க நேரிட்டது.அதே போன்று 4 பிரதேச சபைகளின் அதிகாரங்களை குறைந்த வாக்குகளின் அடிப்படையில் இழக்க நேரிட்டது.
நாங்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.எதிர்வரும் தேர்தலில் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.எமது மக்களின் விருப்பத்துக்கும்,அபிவிருத்திக்கும் எதை செய்யக் கூடியவர்கள் என்பதை அடையாளப்படுத்த வேண்டும்.இன்றை வடக்கின் சூழ் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்த இடம் தெரியாமல் விரட்டப்பட்டுள்ளது.இன்றை சூழல் என்பது ஒரு தற்காலிக சமாதானம் ஏற்பட்டுள்ளது.அதனை நிரந்தரமானதாக மாற்றுவது எமது கைகளில் தான் இருக்கின்றது.வடக்கு,கிழக்குக்கு வெளியில் தென்னிலங்கையில் வாழும் எந்த சுதந்திரத்தினையும் அபிவிருத்திகளையும் அனுவிக்கின்றார்களோ,அதனை இந்த வடமாகாண மக்களும் கிழக்கு மாகாண மக்களும் அனுபவிக்க வேண்டும் என்பதி்ல் நாம் உறுதியாக இருக்கின்றோம்.எந்த நச்சுக்களை துாவி இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்கினார்களோ,ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தார்களோ அவர்களின் பின்னால் செல்ல முடியாது.17 வருடம் ஆட்சியமைக்க முடியாமல் இருந்த சிறிமாவை பிரதமராக,சந்திரிக்காவை ஜனாதிபதியாக ஆக்கியவர்கள் நாங்கள்.இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தரக் கூடிதொரு அரசியல் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாங்கள் பார்க்கின்றோம்.அதனால்அவரோது கைகோர்த்து செல்கின்றோம்.அதே போல் நாங்கள் யாரோடும்,நிரந்தரமான நண்பர்களுமல்ல,நிரந்தரமான எதிரிகளுமல்லா என்பதை சொல்லி வைக்கவிரும்புகின்றோம்.
இந்த சமூகத்தின் பிரச்சினைகளை யார் தீர்ப்பதற்கு முன்வருகின்றார்களோ,அவர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்பபோம்.எங்களை எவர்கள் இல்லாமல் ஆக்க துடிக்கின்றார்களோ,அவர்களை துாக்கி எரிந்துவிடும் நிலை எமக்கிருக்கின்றது.தனிப்பட்ட சொகுசு வாழ்வுக்காக எமது சமூகத்தினை ஒரு போதும் அடகு வைத்து அரசியல் லாபம் பெரும் துரோகத்தை செய்ய மாட்டோம் என்றும் பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளா கூறினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீனும் உரையாற்றினார்.அமைச்சரின் ஆலோஷகரும்,தொழிலதிபருமான எஸ்.கே.பி.அலாவுதீன்,வேட்பாளர்கான
பிள்ளைஉம், கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கூட்டம் இது, மக்களே அவதானமாக இருங்கள்.
ReplyDeleteகிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கள்ளவாக்கு எண்ணிக்கையைச் சேர்த்து நீங்கள் வெற்றி கொண்டது போல் மன்னார் மாவட்டத்தையும் வெற்றி கொள்ளாமல் இருந்தால் சரி.
ReplyDeleteறவூப் ஹக்கீம் மாத்திரமல்ல, நீங்களும்தான் தம்புள்ள பள்ளிவாசலில் ஒரு தகரத்திற்குக்கூட சேதம் ஏற்படவில்லையென்று இனாமலுவ தேரரின் காலடியில் குந்தியிருந்து விசுவாசப் பிரமாணம் அளித்த பின்னர்தானே பொருளாதார அமைச்சராகவும் உயர்ந்தீர்கள். உங்கள் வரலாறு இப்படியிருக்க றவூப் ஹக்கீமைப்பற்றி விமர்சிக்க உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது?
மரத்துக்கு வாக்களிக்காமல் வெற்றிலைக்கு வாக்களிப்பதால் மாத்திரம் பொது பல சேனாவை ஒழித்துக்கட்டிவிடலாம் என்று உங்களாலோ, உங்களின் அரசாங்கத்தினாலோ உத்தியோகபூர்வ தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் மும்மொழிகளிலும் உத்தரவாதமளிக்க முடியுமா? அப்படி வெளியிட்டால் தெற்கில் 'வெற்றிலை'யை சிங்கள மக்களே சப்பித் துப்பி விடுவார்கள்!
தேர்தல் காலங்களில் நீங்கள் பேசாத இனவாத, மதவாத உணர்ச்சியூட்டல்களா இப்போது ஊட்டப்பட்டு வருகின்றன? உங்களின் வெற்றிக்கு அடிப்படை மூலதனமே இந்தப் பிரதேசவாதம், மதவாதம், இனவாதம் போன்றவைதானே?
இதுவரை காத்தான்குடியில் போடப்பட்ட தேர்தல் மேடைகளில் நீங்கள் பேசிய எத்தனை வகையான விடயங்களை அமுல்படுத்தி இருக்கின்றீர்கள் என்பதைப் பட்டியலிட முடியுமா? கடற்கரையில் காணப்படும் கச்சான் கோதுகளை அப்புறப்படுத்த ஜப்பான் நாட்டில் இருந்து நவீன இயந்திரம் வருவதாகக் கூறியதில் இருந்து ஊரில் சேரும் குப்பைகளை அள்ளிச் செல்ல நவீன இயந்திரம் வருவதாக வாக்களித்த விடயங்கள் வரை என்னால் பட்டியலிட்டு உங்களின் பொய் வாக்குறுதிகளை நிரூபிக்க முடியும்.
நீங்களே வாய்திறந்தால் பேசுவது பொய் என நான் பலமுறை உள்ளுரில் நிரூபித்திருக்க, நீங்கள் மன்னாருக்குச் சென்று பொய் சொல்லக்கூடாது என உபதேசித்திருப்பது வெட்கக் கேடாகும்.
முதூர் றிசானாவின் குடும்பத்துக்காக அரேபிய தனவந்தர் உங்களிடம் கொடுத்த 10 இலட்சம் ரூபாவுக்கு என்ன நடந்துள்ளது என்பதை பொய் சொல்லாமல் உண்மையாகச் சொல்ல முன்வருவீர்களா?
முஸ்லிம்களின் வாக்குகளால் ஆட்சியமைக்கத் தவறிய பிரதேச சபைகளுக்கு உள்ளுராட்சி சபைகளால் பவுசர் தண்ணீர் வழங்க முடியவில்லையென்றால் நீங்களெல்லாம் என்ன மண்ணாங்கட்டிக்கு மத்திய அரசில் இருக்கிறீர்கள்?
தேர்தல் காலத்தில் ஆளம்பு சேகைளுடனும், இசைக்கருவிகளுடனும் கொழும்பிலிருந்து படையெடுக்கும் உங்களுக்கு, இந்த மக்களுக்கு பவுசர் தண்ணீரைக் கொடுக்க முடியாத கையாலாகாத்தனத்தையா புள்ளி விவரங்கள் மூலம் போட்டுடைக்கிறீர்கள்?
தேர்தல் காலங்களில் மாத்திரம்தான் முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றி வாய்கிழியக் கதைப்பீர்கள். தேர்தல் முடிந்ததும் பள்ளிவாசல் நிர்வாகங்களில் உங்கள் கட்சிக்காரர்களை நிர்வாகிகளாக்க பொலிஸ், இராணுவ உதவியுடன் சமூகத்தைப் பிரிப்பீர்கள்.
காத்தான்குடி முதலாம் குறிச்சி மீராபள்ளிவாசல் தொடக்கம் இன்றைய மெத்தைப்பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவு வரைக்கும் காத்தான்குடி முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி நீங்கள் கிழித்திருக்கின்ற கிழிப்புக்களை வரலாற்றுப் புத்தகமாகவே வெளியிடலாம்.
யுத்தம் முடிவுற்று தற்காலிக சமாதானம் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் வடக்குத் தமிழ் மக்களுடன் நல்லிணக்கம் கொள்ளாமல் எப்படி ஐயா வடக்கு முஸ்லிம்கள் சமாதானமாக வாழ முடியும்?
வடக்கில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமின் வீடுகளுக்கும், கடைகளுக்கும் எத்தனை வருடங்களுக்கு உமது அரசாங்கத்தினால் இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு வழங்க முடியும்?
தனிப்பட்ட சொகுசு வாழ்க்கையைப் பற்றி நீங்கள் சொல்ல மக்கள் அதைக் கேட்க வேண்டிய காலம் வந்துள்ளது. உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வாக்களித்தால் இன்னமும் வேண்டும்!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
இவனுகளுக்கு போடும் வாக்க எடுத்து மனோகணேசனுக்கு போட்டாலும் அந்த மனிதர் நன்றியுணர்வுடன் இருப்பார் என்று எண்ணத்தோணுகின்றது. தற்போது உள்ள முஸ்லிம் தலைவர்கள் அனைவரையும் நிராகரிப்பது நல்லது.
ReplyDelete