Header Ads



இஸ்லாமிய சீர்திருத்தங்களை இஸ்லாமிய தீவிரவாதமாகப் பார்க்கின்றனர் - என்.எம்.அமீன்

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள இஸ்லாம் தொடர்பான சீர்திருத்தங்களை சில பெரும்பான்மை சக்திகள் இஸ்லாமிய தீவிரவாதமாகப் பார்க்கின்றன என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் கூறினார்.

மாளிகாவத்தை வீடமைப்பு திட்டத்தின் நலன்புரிச் சங்கம் நடத்தும் மக்தப் மத்ரஸாவின் முதலாமாண்டு பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது, 

இன்று முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, நிகாப், முஸ்லிம்கள் ஐவேளை பள்ளிக்குச் செல்வது, முஸ்லிம் ஆண்கள் அணியும் ஜுப்பா, தாடி வைப்பது போன்றவற்றை தீவிரவாதமாக நோக்குகிறார்கள். இவை எமது சமய போக்கில் காணப்படும் சீர்திருத்தங்களாகும். அறிவு பெருக பெருக முஸ்லிம்கள் தம் சமய வழி முறைகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இவற்றையே தீவிரவாதமாக நோக்குகின்றனர். இவற்றைப் பார்த்துவிட்டு சமூகத்தின் மீது தீவிரவாத முத்திரையைக் குத்த முற்படுகின்றனர். இவை பற்றி மாற்றினச் சகோதரர்களுக்கு தெளிவு படுத்துவது அவசியமாகும்.

எமது பிள்ளைகளுக்கு நாம் ஒழுக்கத்தையே கற்றுக் கொடுக்க வேண்டும். சிறிய வயதில் சமயக் கல்வியை வழங்குவதன் மூலமே அதனை வழங்க முடியும். பெற்றோர்கள் இந்த விடயத்தில் அக்கறையும் ஆர்வமும் காட்ட வேண்டும்.

சமயப் பாடசாலைகளில் வழங்கும் கல்வியை சில நேரங்களில் நாம் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சீர்குலைத்துவிடும். இன்று அநேகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விரசம் மிக்கதாகவும், பாலியல் உணர்வினைத் தூண்டுவதாகவும் உள்ளன. மத்ரஸாவில் ஓரிரு மணி நேரம் படித்துவிட்டு வரும் பிள்ளையுடன் பெற்றோர் ஒன்றாக நின்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதனால் பல மோஷமான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, பிள்ளைகளுக்கு பொருத்தமான நிகழ்ச்சிகளை மட்டுமே தொலைக்காட்சிகளில் பார்க்க இடமளிக்க வேண்டும்.

மக்தப் முறையில் குர்ஆன் போதனையை அறிமுகப்படுத்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது. இதன் வெற்றிக்கு சகலரும் பங்களிப்புச் செய்ய வேண்டும்.

மௌலவி அஷ்ஷேக் பிலால் ஹுமைரி மற்றும் மௌலவி அப்துல் சத்தார் ஆகியோரும் உரையாற்றினர். அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன பொருளாளர் சாம் நவாஸ், பௌசர் பாரூக், கொம்பனித் தெரு பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் அஸ்லம் உட்பட பல உலமாக்கள் இதில் கலந்து கொண்டனர்.  

1 comment:

  1. What you said is absolutely correct.However,We Muslims need to practice what we preach. So, I encourage you and pray for you to have a beard which is a strong Sunnah and will protect you from Shaytan.

    ReplyDelete

Powered by Blogger.