வடக்கில் மக்களின் உள்ளத்தில் அபிவிருத்திகளின் ஏக்கமே குடி கொண்டுள்ளது - றிசாத் பதியுதீன்
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வடக்கில் மக்களின் உள்ளத்தில் அபிவிருத்திகளின் ஏக்கமே குடி கொண்டுள்ளதாகவும். அதனை தீர்த்து வைப்பதற்காகவே மஹிந்த சிந்தனை என்னும் துார நோக்கு சிந்தணை செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் திவிநெகும வேலைத்திட்டம் யுவதிகளின் வாழ்க்கையில் வசந்தத்தையேற்படுத்தும் என்றும் கூறினார்.
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் அனுசரைணையின் திவிநெகும வாழ்வெழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் பயிற்சிகளை முடித்துக் கொண்ட யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரைாயற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில் கூறியதாவது,
கடந்த 30 வருடகாலம் எமது மாவட்டம் எவ்வித அபிவிருத்தியும் கண்டிருக்கவில்லை. மக்களது வாழ்வில் எவ்வித அபிவிருத்திகளும் இடம் பெற்றுறிருக்கவில்லை. அதனை தொடர்நது வைத்துக்கொண்டு எமது மாவட்டத்தினதும்,நாட்டினதும் அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது. அதற்காகத்தான் வீட்டு மணைப் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தை நடை முறைப்படுத்தும் திட்டங்கள் இடம் பெறுகின்றது. எமது மாவட்த்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் கணவர்களை இழந்த விதவைகள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த திவிநெகும பயிற்சி திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும்.
எமது மாவட்டமானது பல்வேறு வழங்களை கொண்டது.உழைப்பின் மூலம் வருமானத்தை ஈட்டும் தொழிலாளர்களை கொண்டது. அதனை மேலும் கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் எடுத்துவருகின்றோம்.இன்று மன்னார் மாவட்ட யுவதிகளும்,இளைஞர்களும் வருமானம் ஈட்டிக்கொள்ளும் வகையில் ஆடைத் தொழிற்சாலையொன்று நிறுவப்பட்டுள்ளது.அதிலும் இன்று பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் யுவதிகள் தொழில் வாய்ப்பை பெறுவதற்கு இந்த சான்றிதழ் உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர்,பிரதி இளைஞர் சேவைகள்மன்ற பிரதி பணிப்பாளர் எம்.முனவ்வர்,உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment