அரசியல்வாதி ஏமாற்றிவிட்டார் - மரத்தில் ஏறி தொழிலாளி போராட்டம்
(JM.Hafeez)
தம்புள்ளை பஸ்நிலையத்தின் முன்பாகவுள்ள வாகை மரமொன்றில் மேசன் ஒருவர் ஏறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தம்புள்ளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ளை பிரதி மேயர் குசும்சிரி ஆரியரத்ன என்பவரது வீட்டில் நிர்மாண வேலைகளில் ஈடுபட்டிருந்த மேசன் தொழிலாளி ஒருவரே இவ்வாறு இன்று 12-09-2013 அதிகாலை முதல் மரத்தில் ஏறி தனக்கு நியாயம் வேண்டும் என்று தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த வீட்டு நிர்மாண வேலைகளில் தனக்கு கூலியாக 91 ஆயிரம் ரூபா சம்பளமாக கிடைக்கவுள்ளதாகவும் அதனை பெற்றுத் தருமாறு கோரியே அவர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை பிரதி மேயர் இது பற்றித் தெரிவிக்கையில், தான் 25 ஆயிரம் ரூபா மாத்திரமே கொடுக்க வேண்டியுள்ளதாகவும் மிகுதிப் பணிகள் பூர்த்தி அடைந்தால் அப்பணத்தை தான் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேற்படி இழுபறி நிலை காரணமாகவே இவ்வாறு அவர் மரத்திலேறி ஆர்பாட்டம் செய்து வருவதாகவும் தெரிய வருகிறது.
பொதுபலசேனவுக்கு அறிவியுங்கள் இது யார் செய்கின்றார்கள் என்பதை பொதுபலசேனா எங்களுக்கு விபரிக்கவேண்டும். அல்லது நாங்கள் இதுபோன்ற கேள்விகளைக்கேட்கக்கூடாது என்றால் பொதுபலசேனாவை தடைசெய்ய நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள்.
ReplyDelete